என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    ஸ்ரீ பைரவரை ஒன்பது வாரம் தொடர்ந்து அஷ்டோத்திர அர்ச்சனை செய்து வழிபட செல்வச் செழிப்பைப் பெறலாம். பணம் குவியும், அஷ்ட ஐஸ்வர்யமும் பெறலாம்.
    கடன் வாங்கி வட்டி, அசல் கட்ட இயலாதவர்கள் ஞாயிறு ராகு காலத்தில் காலபைரவருக்கு முந்திரி பருப்பு மாலை கட்டி, செந்தாமரை பூ அணிவித்து, கேரட் அல்வா, கோதுமை அரிசி பலகாரம், அவல், கேசரி, சிவப்பு அப்பிள் படையலிட்டு, புனுகு சாற்றி வெண்பொங்கல் நைவேத்யமிடவும்.

    ஒரு தலை வாழை இலை வைத்த அதன் மீது நெல் 1 படி பிரப்பி அதன் மீது ஒரு தலை வாழை இலை வைத்து பச்சரிசி 1 படி குங்குமம் சிறிதளவு மஞ்சள்பொடி, நெய் கலந்து பரப்பி அதைச்சுற்றிலும் ஐந்து எண்ணெய், சிறிதளவு மஞ்சள்தூள் கலந்து முப்பது பழங்களில் மிளகு தீபம் ஏற்றி ஸ்ரீ சொர்ணபரைவரை வழிபடலாம்.

    இந்த வழிபாட்டை செய்யும்போது பைரவி தேவி காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து, ஸ்ரீ பைரவரை ஒன்பது வாரம் தொடர்ந்து அஷ்டோத்திர அர்ச்சனை செய்து வழிபட செல்வச் செழிப்பைப் பெறலாம். பணம் குவியும், அஷ்ட ஐஸ்வர்யமும் பெறலாம்.



    பெரிய பழங்களில் தீபம் ஏற்ற முடியவில்லை என்றால் சிறிய பழங்களில் ஏற்றலாம். அல்லது சிறிய வெங்கல கிண்ணத்தில் முப்பது மிளகைத்தூள் செய்து தீபம் ஏற்றலாம் அல்லது ஒரு பூசணியில் மிளகு தீபம் ஏற்றலாம்.

    இந்த விசேஷ பரிகாரத்தை மாதம் ஒரு முறை வரும் ஜனம அல்லது த்ரிஜன்ம நஷத்திரம் அன்றும் செய்வது சாலச்சிந்தது. மற்றும் பவுர்ணமியும், வளர்பிறை அஷ்டமி நாளிலும் இந்தப் பூஜையை செய்வதால் நிம்மதியாக வாழலாம். நமது கவலைகள் பிரச்சினைகள், ஏக்கங்கள், சோகங்கள், இப்படி அனைத்தையும் போக்குவதற்கு ஓர் அரிய உபாயம் இந்த பூஜை.

    ஸ்ரீ ஸ்வர்ண பைரவர் மந்திரம் ஜபிக்கும்போது, ஏலக்காய் சிறிதளவு குங்குமம், மஞ்சள், நெய் கலந்து முத்துக்களால் பைரவர் திருவடியில் அர்ச்சனை செய்யலாம். பைரவருக்கு ஏலக்காய் மாலை செலுத்தலாம். ஒரு பிடி ஏலக்காயை பைரவர் பாதத்தில் வெற்றிலை மேல் வைக்கலாம் கடன் தீர்ந்து பலன் உடனே கைகூடும்.
    தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். பைரவருக்கு செய்யவேண்டிய பரிகாரங்களும் அதனால் தீரும் பிரச்சனைகளையும் பார்க்கலாம்.
    தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும்.இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம். பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

    இழந்த பொருட்களை மீண்டும் பெற :

    பைரவரின் சன்னதி முன்னால் (27) மிளகை வெள்ளைத் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாள் வழிபட்டால் இழந்த பொருட்களும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.

    குழந்தைச் செல்வம் பெற :



    திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப் பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபடின் விரைவில் அத்தம்பதியருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும்.

    சனி பகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்க :

    சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே, நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும்.

    தடைபெற்ற திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும் :

    ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும். 6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைபட்ட திருமணம் கைகூடும். தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.
    பட்டுக்கோட்டையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விளங்குளத்தில் அமைந்துள்ளது அட்சயபுரீஸ்வரர் கோவில். இது சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.
    பட்டுக்கோட்டையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விளங்குளத்தில் அமைந்துள்ளது அட்சயபுரீஸ்வரர் கோவில். பூச புதன் நேசம் தரும் என்பது பழமொழி. புதன் என்பது சனீஸ்வரரைக்குறிக்கும், எமதர்மராஜன், தன் தந்தையான சனீஸ்வரனின் காலில் அடிக்க அது ஊனமானது.

    இதற்கு நிவாரணம் தேடி பல சிவத்தலங்களுக்கு அவர் சென்றார். இத்தலத்துக்கு வந்தபோது, விளாமரவேரில் கால் இடறி அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தார். அவர் விழுந்த நாள் திருதியையும், பூச நட்சத்திரமும், சனி வாரமும் சேர்ந்த நன்னாளாக இருந்தது.

    அவர் விழுந்த இடத்தில் இருந்து, பல காலமாக மறைந்திருந்த பூச ஞானவாவி தீர்த்தம் சுரந்து சனீஸ்வரரை மேல் எழுப்பி கரை சேர்த்தது. அப்போது சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக சனீஸ்வரருக்கு காட்சி தந்து, திருமண பாக்கியமும் தந்தார்.

    சனீஸ்வரரின் ஊனம் நிவர்த்தி ஆனது. விளாமரம் இருந்ததாலும், தீர்த்தம் சுரந்ததாலும் இவ்வூர் விளங்குளம் ஆனது. பூச நட்சத்திரலோகத்தில் வசித்த பூச மருங்கர் என்ற சித்தர், சனீஸ்வரலோகத்திருக்கும் சனிவாரி தீர்த்தத்தை எடுத்து, பூமியில் பல கோயில்களில் உள்ள தீர்த்தங்களில் அதை சேர்ப்பார்.

    அந்த தலங்களில் எல்லாம் சனீஸ்வரருக்கு முக்கியத்துவம் உண்டாயிற்று. இந்த சித்தர் சூரிய லோகத்துக்கும் கூட தினமும் சென்று வரும் அரிய சக்தியை உடைய பிதர்சாய் என்னும் காக்கைகளுக்கு சற்குருவாக விளங்குகிறார். இவர் தினமும் இத்தலத்தில் வழிபாடு செய்வதாக ஐதீகம்.



    பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் நட்சத்திர தினம் மற்றும் திரிதியை திதி நாட்களில் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்சினைகள் எல்லாம் தீரும், உடல் நலக்குறைவு, கடன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், மன நிம்மதி வேண்டுபவர்கள், ஊனமுற்றவர்கள், கால் சம்பந்தமான நோய் உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் விளங்குளம் சனீஸ்வரரை வழிபட்டு வரலாம்.

    இங்கு சனீஸ்வர பகவான் மந்தா, ஜேஷ்டா என்ற மனைவியருடன் திருமண கோலத்தில் ஆதிபிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அபிவிருத்தி நாயகியை வழிபட்டால் செல்வவளம் உண்டாகும்.

    பூச நட்சத்திர தோஷ வழிபாடு :

    பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பக்தி ஞானம் உடையவர்கள். நல்ல குணம் மிகுந்தவர்கள். எதிலும் நீதி, நியாயம் பார்ப்பவர்கள். வாக்கு தவற மாட்டார்கள். தன்னைப்போல் பிறரும் இருக்கவேண்டும் என விரும்புபவர்கள். தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வார்கள்.

    சிலர் யோசனை முறையில் தீவிர நாட்டம் உடையவராக இருப்பர். பூசம் நட்சத்திரத்தின் அதிபதி சனி. இந்நட்சத்திரத்தின் முழுமையான நாழிகை 52. இந்நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தெய்வம் சாஸ்தா. பூச நட்சத்திரக்காரர்கள் சாஸ்தாவை வழிபட்டால் சகலயோகங்களும் பெறலாம்.
    தீய சக்தியால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை பாதிப்புள்ளவர்கள் சோட்டாணிக்கரை ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்தால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
    கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் அமைந்துள்ள திருத்தலம் சோட்டாணிக்கரை. இந்த ஆலயத்தில் ராஜராஜேஸ்வரி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவரை அனைவரும் சோட்டாணிக்கரை பகவதி என்றே அழைக்கிறார்கள்.

    இந்த அம்மன் முழுவதும் ருத்ராட்சத்தால் ஆனது என்பது சிறப்புக்குரிய விஷயமாகும். இந்த அம்மனை வழிபாடு செய்தால் ஈசனின் திருவருளையும் பெறலாம் என்கின்றனர் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இத்தல அம்மனை ஒரு நாளில் முப்பெரும் தேவியர்களின் வடிவத்தில் வழிபாடு செய்யலாம்.



    அதாவது காலையில் இந்த அம்மன் துர்க்கையாகவும், மதியம் லட்சுமி தேவியாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் அலங்காரம் செய்யப்பட்டு காட்சி தருகிறாள். தீய சக்தியால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை பாதிப்புள்ளவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து செல்கின்றனர்.
    கிரக பெயர்ச்சிகளால் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருப்பதற்காக இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் மந்திரங்களை தினமும் பாராயணம் செய்யலாம்.
    அஹ: ஸூதே ஸவ்யம் தவ நயனமர்காத்மகதயா
    த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜனி நாயகதயா
    த்ருதீயா தே த்ருஷ்டிர் – தரதலித ஹேமாம்புஜ – ருசி:
    ஸமாதத்தே ஸந்த்யாம் திவஸ நிசயோ – ரந்தரசரீம்

    ‘தேவீ, உன்னுடைய வலக்கண் சூரியனைப் போன்று திகழ்ந்து பகலை ஏற்படுத்துகிறது; உன்னுடைய இடக் கண் சந்திரனைப் போன்று திகழ்ந்து இரவை உண்டாக்குகிறது; இரண்டுக்கும் மத்தியில் அமைந்திருக்கும் மூன்றாவது கண்ணோ, அப்போதுதான் சிறிதே மலர்ந்த பொற்றாமரை மலரைப் போல் திகழ்ந்து, இரவுக்கும் பகலுக்கும் இடைப்பட்ட சந்தியா காலத்தை உணர்த்துகிறது. இரவும், பகலும், இரண்டுக்கு இடைப்பட்ட சந்தியா காலமும் உன்னுடைய கண்களில் இருந்துதான் உண்டாகிறது. எனவே தேவீ, நீயே காலங்களைப் படைப்பவளாக இருப்பதுடன், காலங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருக்கிறாய் என்பதுதான் இந்த ஸ்தோத்திரத்தின் சாரம்.



    சௌந்தர்யலஹரியின் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்ய இயலாதவர்கள், சீர்காழி தலத்தில் அவதரித்து, அம்பிகையினால் ஞானப் பால் புகட்டப்பெற்ற திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் முழுவதையுமோ அல்லது இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஒரு பாடலை மட்டுமோ பாராயணம் செய்யலாம்.
    108 சிவாலயம் தலத்துக்கு வந்து இங்குள்ள ராமலிங்கத்தையும், சனி பகவானையும் வழிபட்டால் அனைவரின் தோஷம் விலகி வாழ்வில் வளம் பெறலாம் என்று தலபுராணம் கூறுகிறது.
    தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள 108 சிவாலயம் ராமலிங்க சுவாமி திருக்கோவில், ‘கீழை ராமேஸ்வரம்’ என்று அழைக்கப்படுகிறது. 108 சிவலிங்கங்கள் ஒரே இடத்தில் பிரமாண்டமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதால், இத்தலம் சிறப்பு பெற்று விளங்குகிறது. மூலவர் ராமலிங்கசுவாமி. 106 சிவலிங்கங்கள் பக்தி பரவசமூட்டும் வகையில் மூன்று வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலின் தென்புறம் அனுமன் காசியில் இருந்து கொண்டு வந்த, அனுமந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பாள் நாமம் பர்வத வர்த்தினி. தென்னகத்தில் மிகப்பெரிய (6 அடி உயரம்) சூரிய பகவான் சிலையும் கோவிலின் கிழக்குப்புறத்தில் அமைந்துள்ளது.

    ராமபிரானின் தோஷம் நீங்கப்பெற்ற இத்திருத்தலத்துக்கு வந்து இங்குள்ள ராமலிங்கத்தையும், சனி பகவானையும் வழிபட்டால் அனைவரின் தோஷம் விலகி வாழ்வில் வளம் பெறலாம் என்று தலபுராணம் கூறுகிறது.

    அனுமன் காசியில் இருந்து எடுத்து வந்த சிவலிங்கம் கோவிலின் தென்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வசிஷ்ட முனிவர் காசியில் இருந்த லிங்கம் ஒன்றை காணவில்லை என்பதை அறிந்து சூரிய பகவானிடம் கேட்டார். அதற்கு அவர், தான் பார்க்கவில்லை என்று கூறினார். அதை நம்ப மறுத்த முனிவர் சூரியனுக்கு சாபமிட்டார். சாபம் நீங்குவதற்கு சூரியன் கண்டியூரிலுள்ள அரசாப விமோசன பெருமாள் கோவிலுக்கு வந்து வழிபட பாதி சாபம் நீங்கப் பெற்றது. பின்னர் ஐயாறப்பர் சுவாமியின் வழிகாட்டுதலால் பாபநாசத்துக்கு வந்து வழிபட சூரிய பகவானின் முழு சாபமும் நீங்கியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.



    சூரியனுக்கு சாபமிட்டு கோபத்துடன் வசிஷ்ட முனிவர் வரும் போது, அங்கிருந்த அரசமரத்தில் காக உருவில் இருந்த சனீஸ்வர பகவான் சிரித்தார். முனிவர் அவரிடம் ‘எதற்காக சிரித்தாய்?’ என்று கேட்க, அதற்கு சனீஸ்வரன், ‘ஒரு குரங்கு லிங்கத்தை பெயர்த்து எடுத்து சென்றது’ என்று கூறினார். இதனால் கோபம் அடைந்த முனிவர், இதுவரை உண்மையைக் கூறாமல் மறைத்த காரணத்தால் சனி பகவானுக்கும் சாபம் கொடுத்தார்.

    சனி பகவானும் தன்னுடைய சாபம் தீர கண்டியூர் அரசாப விமோசன பெருமாள் ஆலயத்துக்கு வந்து தரிசித்து பாதி சாபம் நீங்கப்பெற்றார். பின்னர் ஐயாறப்பர் வழிகாட்டுதலின் பேரில் பாபநாசத்துக்கு வந்து வழிபட்டதும், முழு சாபமும் நீங்கியது. ராமபிரானின் உத்தரவுபடி இக்கோவிலின் கிழக்குபகுதியில் சூரியபகவான் அருகே சனீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    கும்பகோணத்தில் இருந்து மேற்கே 15 கிலோ மீட்டர் தூரத்திலும், தஞ்சையில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
    மாத சிவராத்திரி நன்னாளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு தலங்களுக்கும் சென்று சிவபெருமானை வழிபாடு செய்தால் சர்ப்பதோஷம் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.
    நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் தனது ஆயிரம் தலைகளால் பூமியை தாங்கிக்கொண்டு இருப்பவர். எப்போதும் அவர் பூமியை தாங்கிக்கொண்டு இருந்ததால் தன் பலம் அனைத்தையும் இழந்து தவித்தார். இதனால் உடல்சோர்வு ஏற்பட்டு அதனை நீக்கி வலிமை பெறக் கருதி சிவபெருமானிடம் சென்று முறையிட்டார். அதைக்கேட்ட சிவபெருமான், ஆதிசேஷனை சோழநாட்டில் காவிரிநதி ஓடும் சிவாலயங்களுக்கு சென்று வழிபடும் படி கூறினார். அதன்படி ஆதிசேஷன் பல தலங்களையும் தரிசித்து இறுதியாக கும்பகோணம் வந்தார்.

    ஒரு சிவராத்திரியில் முதல் ஜாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமியையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரநாதரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் தரிசித்தார். அப்போது சிவபெருமான் சிவலிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு மேலும், பூமி முழுவதையும் தாங்கும்படியான வலிமையையும்,வேறு பல நலன்களையும் வழங்கினார்.

    இதனால் சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களுக்கும் சென்று சிவபெருமானை வழிபாடு செய்தால் உடலில் உள்ள எல்லா வியாதிகளும் நீங்கும் என்றும், சர்ப்பதோஷம் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.



    கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோவில் நாக தோஷ பரிகார தலமாகும். சுவாமி பெயர் நாகேஸ்வரர். அம்பாள் நாமம் பெரியநாயகி அம்மன், சூரியன் வழிபட்டதால் பாஸ்கரஷேத்திரம் என்றும், பிரளயகாலத்தில் கும்பத்தில் இருந்து வில்வம் விழுந்த இடத்தில் பெருமான் தோன்றியதால் வில்வ வனம் என்றும் வழங்கப்படுகின்றன.

    திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதசுவாமி கோவில் கும்பகோணத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இது நவக்கிரகங்களில் ராகு தலமாகும். ராகு பகவான் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க சிவராத்திரியன்று முதல் காலத்தில் பூஜித்த தலம். கோவில் வெளிப்பிரகாரத்தில் தென் மேற்கு மூலையில் ராகு பகவான் தன் இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார். இறைவன் பெயர் நாகேஸ்வரர். இறைவியின் நாமம் பிறையணியம்மன்.

    திருப்பாம்புரம் பாம்புரநாதர் கோவில் திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து பஸ்சில் செல்பவர்கள் திருநள்ளாறு செல்லும் சாலையில் திருநாகேஸ்வரம், திருநீலக்குடி வழியாக 1 மணி நேரம் பயணித்தால் திருப்பாம்புரத்தை அடையலாம். நாகூர் நாகநாதர் கோவில் நாகப்பட்டினத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் காரைக்கால் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. சுவாமி பெயர் நாகநாதர். அம்பாள் நாமம் நாகவல்லி.
    நாகதோஷம் முதலான அனைத்து தோஷங்கள், திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள் வையப்பமலை கோவிலில் வந்து பிரார்த்தித்தால் அனைத்தும் கைகூடுமாம்.
    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் - திருச்செங்கோடு சாலையில் உள்ளது வையப்பமலை. இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள பெரியமணலியில் அற்புதமாகக் கோவில் கொண்டிருக்கிறார் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி. அம்பாளின் திருநாமம் - ஸ்ரீசிவகாமி அம்பிகை.

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கே பாப்பாத்தி என்னும் ஒரு பெண்மணி, கணவரை இழந்து தனியே வாழ்ந்து வந்தாள். தீவிர சிவபக்தி கொண்டிருந்த பாப்பாத்தி, தினமும் கோவிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்வது வழக்கம். இவளது பக்தியில் மகிழ்ந்த சிவபெருமான், ஒருநாள் அவளுக்குத் திருக்காட்சி தந்தருளினார் என்கிறது ஸ்தல வரலாறு.

    தன் பக்தைக்குக் காட்சி தந்தபோது, நாகம் ஒன்று சந்நிதியின் லிங்கத் திருமேனியில் இருந்து வெளியே வந்து, பிறகு மீண்டும் சந்நிதிக்குச் சென்று, லிங்கத் திருமேனியைச் சுற்றியபடி காட்சி தந்ததாம். எனவே, இந்தத் தலத்து இறைவனுக்கு ஸ்ரீநாகேஸ்வரர் எனும் திருநாமம் உண்டானது என்கின்றனர்.



    ஸ்ரீநாகேஸ்வரர் எனத் திருநாமம் கொண்டு, அருளாட்சி செய்யும் தலம் இது. எனவே, இங்கு வந்து சிவனாரை வழிபட்டுப் பிரார்த்திக்க, நாகதோஷம் முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதேபோல், திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள் இங்கு வந்து பிரார்த்தித்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடுமாம். மேலும் இந்தத் தலத்தில் திருமணம் செய்து கொண்டால், கணவனும் மனைவியும் ஒற்றுமையாகவும் அந்நியோன்யமாகவும் சிறப்புற வாழ்வார்களாம்.

    இங்கு ஸ்ரீதுர்கை, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீகல்யாண சுப்ரமணியர் மற்றும் சூரிய - சந்திரர்கள் ஆகியோர் தனித்தனிச் சந்நிதிகளில் இருந்தபடி அருள்பாலிக்கின்றனர்.

    மகாசிவராத்திரி நன்னாளில், இரவில் நான்கு கால பூஜைகள் விமரிசையாக நடைபெறும். இந்த பூஜையில் கலந்து கொண்டு சிவனருளைப் பெறுவதற்காக நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் முதலான பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.

    தொழிலில் பின்னடைவு ஏற்பட்டுத் தவிப்பவர்கள், நல்ல வேலை கிடைக்காமல் அல்லல்படுபவர்கள், குடும்பத்தில் கருத்துவேறுபாடுகளால் கதிகலங்கிக் கதறுபவர்கள் ஆகியோர், மகாசிவராத்திரி திருநாளில் இங்கு வந்து சிவனாரை வழிபட, விரைவில் அனைத்து நலனையும் பெறுவர் என்பது நம்பிக்கை.

    மகாசிவராத்திரி பூஜையில் பங்கேற்று ஸ்ரீநாகேஸ்வரரைத் தரிசித்தால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள்.
    சிவராத்திரி அன்று நள்ளிரவு கடைசி 14 நாழிகை அதாவது இரவு 11.30 முதல் நள்ளிரவு 1 மணி வரையான காலத்தில் சிவனை நாம் வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகும்.
    திருவண்ணாமலையில் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் சிவபெருமான் ஒளி வடிவில் காட்சி கொடுத்த நாள் சிவராத்திரி.

    அப்படிச் சிவன் விஸ்வரூப தரிசனம் கொடுத்த காலம் லிங்கோத்பவ காலம்னு சொல்லப்படுகிறது. (சிவராத்திரி அன்று நள்ளிரவு கடைசி 14 நாழிகை அதாவது இரவு 11.30 முதல் நள்ளிரவு 1 மணி வரையான காலம் லிங்கோத்பவ காலம் என்றழைக்கப்படும்) அதை நினைவுப்படுத்தும் விதமாகத் தான் எந்தச் சிவன் கோயிலாக இருந்தாலும் சிவலிங்கத்துக்குப் பின்புறம் லிங்கோத்பவர் இடம் பெற்றிருப்பார்.

    சிவனை அந்த நேரத்தில் நாம் வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகும். சவுக்யமாக வாழ ஒரு வழி கிடைக்கும்.

    பங்குனி மாதம் பவுர்ணமியில் இந்த தீர்த்தத்தில் நீராடினால் மாதர்களால் வந்து பொருந்திய பாவம் தீரும். இந்த தீர்த்தத்தில் நீராடினால், உடலில் உள்ள அனைத்து நோய்களும் ஒழிந்து போகும்.
    திருவண்ணாமலையில் தோன்றிய தீர்த்தங்கள் 320 ஆகும். இங்கு இந்திரலிங்கமும், இந்திர தீர்த்தமும் பல நூற்றாண்டுகளாக சிறந்து விளங்குகின்றன.

    இந்திரன் இந்த தீர்த்தத்தில் குளித்துத்தான் தான் செய்த குற்றங்கள் நீங்கப் பெற்றான். மேலும் இந்திர பதவியில் நீடிப்பதற்கும் உரிமை பெற்றான். இந்த இந்திர தீர்த்தத்தில் தான் ரமணர் துறவு பூண்டார்.

    அருணாச்சலேஸ்வரருக்கு தென்கிழக்கில் அக்னி லிங்கமும், அக்னி தீர்த்தமும் உள்ளது. இந்த தீர்த்தத்தில் தான் அக்னி தேவன் நீராடி, நினைப்பால் உண்டான பாவத்தை நீக்கிக்கொண்டான்.

    பங்குனி மாதம் பவுர்ணமியில் இந்த தீர்த்தத்தில் நீராடினால் மாதர்களால் வந்து பொருந்திய பாவம் தீரும். மலையின் தெற்கு திசையில் ‘எமன் தீர்த்தம்’ அமைந்து உள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடினால், உடல் பொன் வடிவம் பெறும். உடலில் உள்ள அனைத்து நோய்களும் ஒழிந்து போகும்.

    எமன் தீர்த்தத்திற்கு தெற்கு திசையில் அகத்தியரால் ஏற்படுத்தப்பட்ட ‘அகத்திய தீர்த்தமும்’ அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் புரட்டாசி மாதத்தில் நீராடி, தண்ணீரை உட்கொண்டால் நம் முகத்தை பார்ப்பவர்களும் தமிழ் கவி அரசர்கள் ஆவார்கள். திருமகளும், கலைமகளும் அவரிடத்தில் வந்து தங்கி இருப்பார்கள்.
    இந்த தீர்த்தம், நிருதி மூலையில் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் மூழ்குபவர்களுக்கு ஏற்பட்ட அரிய பகைகள் எல்லாம் நீங்கும்.



    மேற்கு திசையில் ‘வருண தீர்த்தம்’ அமைந்துள்ளது. இந்த வருண தீர்த்தத்தில் நீராடினால் 9 கிரகங்களும் நன்மையை கொடுக்கும். இந்த தீர்த்தத்திற்கு வாயு திசையில் ‘வாயு தீர்த்தம்’ உள்ளது. அதில் நீராடினால், எல்லா துன்பங்களும் தீரும். வடக்கு திசையில் குபேர லிங்கமும், குபேர தீர்த்தமும் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடினால், வறுமை எல்லாம் நீங்கி, சிவபெருமான் திருவடியை அடையலாம்.

    ஈசான்ய திசையில் ஈசான்ய லிங்கம் மற்றும் ‘ஈசான்ய தீர்த்தம்’ அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடி, ஈசான்ய லிங்கத்தை வழிபட்டால் மாபெரும் ஞானியாக விளங்குவார்கள். அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் ‘சிவகங்கை தீர்த்தம்’ அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தை தினமும் மனதில் நினைத்தாலே கங்கையில் நீராடிய பலன் உண்டாகும். அநேக உருத்திரர்கள் இந்த தீர்த்தத்தில் மூழ்கித்தான் பெரும் பயன் அடைந்தார்கள்.

    இந்த சிவகங்கை தீர்த்தத்திற்கு கிழக்கில் ‘சக்கர தீர்த்தம்’ அமைந்துள்ளது. திருமால் ‘வராக’ அவதாரம் எடுத்த போது, இந்த சக்கர தீர்த்தத்தில் தான் மூழ்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்த்தத்தை வலம் வருவோரும், இதில் நீராடியவர்களும், இந்த தீர்த்தத்தை உட்கொண்டவர்களும் துன்பக் கடலில் இருந்து வெளியே வந்து சிவபெருமானின் இரண்டு திருவடிகளையும் இடமாகப் பெறுவார்கள்.

    மற்றொரு தீர்த்தமான பிரம்ம தீர்த்தத்தில் நீராடினால், கடந்த பிறவிகளில் செய்த தீவினைகள் நீங்கும். இந்த தீர்த்தத்தில் நீராடி, ஓர் அணு அளவு தங்கத்தை தானம் செய்கிறவர்கள் பெரும் பதவியை அடைவார்கள்.

    ராஜகோபுரத்திற்கு வடக்கு திசையில் அமைந்துள்ளது, சிவாஞ்சி தீர்த்தம் (சிவன் அணைந்த தீர்த்தம்). இந்த தீர்த்தத்தில் குளித்தாலும், அல்லது தண்ணீரை எடுத்து தன் தலையில் தெளித்துக்கொண்டாலும், நாம் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கும். சிவன் நல்ல வழி காட்டுவார். இந்த தீர்த்தத்திற்கு அடியில் ஒரு சிவன் கோவில் உள்ளது என வரலாறு கூறுகிறது.
    விஷ்ணு சகஸ்ர நாமாவளி பாராயணம் செய்தால் கிரக தோஷம், இஷ்ட காரிய சித்தி, விஷம், பேய், பிசாசுகள், வியாதி, கெட்ட கனவு, கெட்ட நிமித்தம் முதலியவற்றில் ஏற்படும் தீமைகளைப் போக்கும்.
    1) கிரக தோஷம் நிவர்த்தியும், இஷ்ட காரிய சித்தியும் உண்டாகும். (ஆதாரம்: கிரக தசாபல தர்ப்பணம் வீருத்த பராசரம் முதலிய கிரந்தங்கள்)

    2) விஷம், பேய், பிசாசுகள், வியாதி, கெட்ட கனவு, கெட்ட நிமித்தம் முதலியவற்றில் ஏற்படும் தீமைகளைப் போக்கும்.

    3) பஞ்ச மஹா பாதகங்கள் முதலியனவற்றை போக்கும்.

    4) இம்மை, மறுமையில் செல்வங்களை கொடுக்கும்.

    5) இந்த ஜென்மத்தில் ஒருவன் முன் வினையால் அனுபவிக்கும் வறுமை நோய்களுக்கு பரிகார சாந்தியாக விளங்குகிறது என்று ‘கர்ம விவாகம்’ என்ற கிரந்தம் கூறுகிறது.

    6) விஷ  காய்ச்சல், வாத நோய், கபவியாதி, பஹி, மூத்த வியாதி, தோஷம் நீங்குகிறது.

    7) குழந்தை பிறந்து தங்காத தோஷம் நீங்குகிறது.

    8) சகல காரிய சித்தியும், சகல சௌபாக்கிய சம்பத்துக்களும் உண்டாகும்.

    9) பிரம்ம ஸித்தியாகி பாபங்கள் நீங்கும்.

    10) விக்னங்கள் பாதிக்காது.

    11) தத்துவ ஞானம், கல்வி அறிவு பெருகும்.

    12) காணாமற் போன சொத்து திரும்ப பெறுதல், ராஜத்வா கோர்ட் வியாஜ்ஜியங்களில் வெற்றி அளிக்கும்.

    13) தடைபடும் விவாஹ சுபமுகூர்த்தம் போன்ற மங்கள காரியங்கள் நடைபெறும்.

    14) கிரக வாஸ்து தோஷம் நீங்கும்.

    பிரம்ம முகூர்த்த வழிபாடு :

    அதிகாலை 3.30 மணி முதல் 4.30 மணிக்குள் (பிரம்ம முகூர்த்த காலம் என்து 4 முதல் 5 மணி வரையிலிலான காலமாகும்) தீபம் ஏற்றி, இஷ்ட தெய்வத்தை தீபத்தில் ஆவாஹனம் செய்து பூஜித்து வர, அந்த தெய்வத்தை தீப ஒளியில் பார்க்கலாம். இது கண்கூடு. நற்பலன்களை கூட்டுவிக்கும்.

    கிரகதோஷம்தான் என்றில்லை. கிரக திசை நடந்தாலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரங்களை கடைபிடிக்க நற்பலன்கள் கிட்டும் என வேதம் கூறுகிறது.
    1) சூரியன், செவ்வாய் திசை நடப்பவர்கள் கோவிலில் தீபம் ஏற்றலாம் (அல்லது) மெழுகுவர்த்தி ஏறலாம். இஃது எளிமையான கிரக தோஷம் போக்கும் வழியாகும். இயன்றவர்கள் தீபம் தானம் கொடுக்கவும்.

    2) சந்திரன், சுக்கிரன் திசை நடப்பவர்கள் அபிஷேகத்திற்கு பால் கொடுக்கலாம். விளக்கிற்கு நெய் கொடுக்கலாம். ஓடுகின்ற நீரில் (ஆற்றில்) பால் விடலாம். ஜலம் (நீர்) எடுத்து கொடுக்கலாம். சுக்கிர, சந்திர கிரக தோஷம் நீங்கும்.

    3) புதன் கிரக தோஷம் நீங்க சந்தனம் (ஒரிஜினல்) ஆலயத்திற்கு அளிக்கலாம். (அல்லது) சந்தன அலங்காரம் செய்து மகிழலாம் (அல்லது) சந்தனத்தை நெற்றியில் தினம் தரித்து வரலாம். பூஜையில் சந்தன ஊதுபத்தி ஏற்றலாம். இது புதன் கிரக தோஷம் நீக்கும் எளிய வழியாகும்.

    4) குரு கிரக தோஷம் நீங்க ஆலய வழிபாட்டிற்கு செல்லும்போது, மலர் மாலை (அல்லது) புஷ்பம் (பூ) சுவாமிக்கு அளிக்கலாம்.

    5) சனி, கிரக தோஷம் நீங்க ஆடை, தூபம், அணிமணிகளை தெய்வத்திற்கு அளிக்கலாம். இராகு, கேதுவிற்கு சொந்த வீடு இல்லாதபடியால் அது நின்ற வீட்டு அதிபதியை பிரதிபலிக்கும் என அறியவும். உதாரணமாக ரிஷப ராசியில் ராகுவும், விருச்சிக ராசியில் கேதுவும் நின்றால், ராகு சுக்கிரனையும், செவ்வாயை கேதுவும் பிரதிபலிக்கும்.

    கிரகதோஷம்தான் என்றில்லை. கிரக திசை நடந்தாலும் மேல் கண்ட எளிய பரிகாரங்களை கடைபிடிக்க நற்பலன்கள் கிட்டும் என வேதம் கூறுகிறது.
    ×