என் மலர்
புதுச்சேரி

X
நாளை பந்த்- புதுச்சேரியில் திரையரங்கு காட்சிகள் ரத்து
By
மாலை மலர்7 March 2024 8:31 PM IST

- பந்த் குறித்து மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.
- போதைப் பொருட்கள் அதிகரிப்பை கண்டித்து பந்த் அறிவிப்பு.
புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றனர்.
இதைதொடர்ந்து, சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி மாநில அதிமுகவும், இந்தியா கூட்டணியும் நாளை பந்த் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை (8ம் தேதி) பந்த் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.
மேலும், சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகரிப்பை கண்டித்தும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியால், காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
Next Story
×
X