search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்காலில்  தீயணைப்பு தடுப்பு வார கட்டுரைப்போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
    X

    வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிழ் வழங்கப்பட்டது.

    காரைக்காலில் தீயணைப்பு தடுப்பு வார கட்டுரைப்போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

    • கட்டுரைப்போட்டி, கடந்த மாதம் திருநள்ளாறு மற்றும் காரைக்கால் என இரு பிரிவுகளில் நடை பெற்றது.
    • கலெக்டர் குலோத்துங்கன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் கடந்த மாதம் நடைபெற்ற தீயணைப்பு தடுப்பு வார கட்டுரைப்போட்டியில், வெற்றி பெற்ற மாணவர் களுக்கு, கலெக்டர் குலோத்துங்கன் பரிசளித்து பாராட்டினார். காரைக்கால் மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 முதல் 21-ந் தேதி வரை தீயணைப்பு தடுப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக் கான தீயணைப்பு தடுப்பு வார கட்டுரைப்போட்டி, கடந்த மாதம் திருநள்ளாறு மற்றும் காரைக்கால் என இரு பிரிவுகளில் நடை பெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டார்கள். போட்டி யில் வெற்றி பெற்ற 4 மாணவ, மாணவிகளுக்கு, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, கலெக்டர் குலோத்துங்கன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    இதில் திருநள்ளாறு பிரிவில் முதல் பரிசு பெற்ற சேத்தூர் அரசு பள்ளியைச் சேர்ந்த கிரிஷ் என்ற மாணவனுக்கு ரூ.900, 2-ம் பரிசு பெற்ற சக்தி என்ற மாணவனுக்கு ரூ.600 வழங்கப்பட்டது. மேலும் காரைக்கால் பிரிவில் கோவில்பத்து அரசு பள்ளியைச் சேர்ந்த முகம்மது இப்ராஹிம் என்ப வருக்கு ரூ.900, ஹரிஷ் ராகவா என்ற மாணவனுக்கு ரூ.600 ரொக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில், துணை கலெக்டர் பாஸ்கரன், கலெக்டரின் செயலர் பக்கிரிசாமி மற்றும் சுரக்குடி தீயணைப்பு அதிகாரி ஹென்றிடேவிட், காரைக்கால் தீயணைப்பு அதிகாரி மாரிமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×