என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி
    X
    திருப்பதி

    புரட்டாசி மாதம் வர உள்ளதால் திருப்பதியில் கூடுதல் தரிசன டிக்கெட்டுகளை வெளியிட பக்தர்கள் கோரிக்கை

    கூடுதலாக வெளியிடப்பட்ட 3 ஆயிரம் டிக்கெட்டுகளும் 2 மணிநேரத்தில் காலியானதால் டிக்கெட்டுகளை பதிவு செய்து தரிசனம் செய்யலாம் என ஆவலோடு காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    திருப்பதி

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்றுக்கு பிறகு 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    கொரோனா தொற்று 3-வது அலை பரவும் அபாயம் உள்ளதால் இலவச தரிசனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 3,000 டிக்கெட்டுகள் ரூ,300 கட்டணத்தில் நேற்று கூடுதலாக வெளியிடப்பட்டது. ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்ட 2 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது.

    கூடுதலாக வெளியிடப்பட்ட 3 ஆயிரம் டிக்கெட்டுகளும் 2 மணிநேரத்தில் காலியானதால் டிக்கெட்டுகளை பதிவு செய்து தரிசனம் செய்யலாம் என ஆவலோடு காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஏழுமலையானுக்கு உகந்த புரட்டாசி மாதம் விரைவில் வர உள்ளதால் கூடுதல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×