என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிக்கலில் சிங்காரவேலர் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்தபடம்.
    X
    சிக்கலில் சிங்காரவேலர் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்தபடம்.

    சிக்கலில் கந்தசஷ்டி விழா: முருகன் சிலையில் வியர்வை வழிந்ததால் பக்தர்கள் பரவசம்

    சிக்கல் சிங்காரவேலர் கோவில் கந்தசஷ்டி விழாவில் வேல் வாங்கும் நிகழ்ச்சியில் முருகன் சிலையில் வியர்வை வழிந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் கோவில் புகழ்பெற்ற முருகன் கோவிலாகும். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் செய்தான் முருகன் என்று கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 28-ந்தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை முருகப்பெருமான் வள்ளி- தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளினார். இரவு கோவிலுக்கு எழுந்தருளிய முருகன் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் பெற்றார்.

    அப்போது முருகனின் சிலை முழுவதும் வியர்வைத் துளிகள் அரும்பி வழிந்தது. அதனை அர்ச்சகர் துணியால் பலமுறை துடைத்தபோதும் தொடர்ந்து வியக்கும் அபூர்வ நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்த பக்தர்கள் சிக்கல் சிங்காரவேலருக்கு அரோகரா என்று கோ‌ஷம் எழுப்பினர். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×