என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்போரூர் முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம் - 26-ந்தேதி தேரோட்டம்
    X

    திருப்போரூர் முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம் - 26-ந்தேதி தேரோட்டம்

    திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி திருக்கோவிலில் மாசிமாத பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.












    திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி திருக்கோவிலில் மாசிமாத பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ‘முருகனுக்கு அரோகரா’ என்ற கோ‌ஷத்துடன் முருகப் பெருமானை வழிபட்டனர்.

    இன்று முதல் 12 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சிகளாக வருகின்ற 24-ந்தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடும், 26-ந்தேதி தேரோட்டமும் நடக்கிறது.

    1-ந்தேதி இரவு தெப்பல் உற்சவமும், 3-ந்தேதி மாலை வேடர்பறிஉற்சவமும், 4-ந்தேதி அதிகாலை 7.30 மணிக்குமேல் 9.00 மணிக்குள் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது.

    தினமும் காலை, மாலை வேளைகளில் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் கிளி, பூத, வெள்ளிமயில், தங்கமயில், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வானவேடிக்கையுடன் வீதி உலா வருவார்.

    இதையொட்டி தினமும் இசைநிகழ்ச்சிகளும், சமயசொற்பொழிவுகளும், நடைபெற உள்ளன.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் சார்பில் செயல்அலுவலர் நற்சோனை மற்றும் மேலாளர் வெற்றிவேல், சிவாச்சார்யர்கள், ஆலயபணியாளர்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×