என் மலர்
செய்திகள்

அரியலூர் கோதண்டராமசாமி கோவில் கும்பாபிஷேகம் 28-ம் தேதி நடக்கிறது
அரியலூர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கோதண்டராமசாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது.
அரியலூர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கோதண்டராமசாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி கோவில் புதுபொலிவு பெற்று வருகிறது. மேலும், யாகசாலை பந்தல் அமைக்கும் பணிகளும், பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்யும் வகையிலும் பாதைகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
கும்பாபிஷேகத்தை யொட்டி வரும் 26-ம் தேதி காலை அகல்மர்சன மற்றும் சுதர்சனஹோமம் உள்ளிட்ட முதல் கால பூஜைகளும், மாலை தீர்த்த சங்கரகனம், ஆச்சார்ய அழைப்புடன் இரண்டாம் கால பூஜைகளும் நடைபெறுகிறது. 27-ம் தேதி காலை கோபூஜை, திருப்பள்ளி எழுச்சியுடன் 3-ம் கால பூஜைகளும், மாலை விமான கண்திறப்பு, கோ தரிசனத் துடன் 4-ம் கால பூஜைகளும் நடைபெறுகின்றன.
தொடர்ந்து, 28-ம் தேதி காலை 4 மணி முதல் கோ பூஜை, யாகசாலை புண்ணியாக வாசனம், அக்னி ஆராதனம், கும்ப ஆராதனம், யுக்த ஹோமம், பூர்ணாஹீதி, ஆராதனம், யாத்திரதான சங்கல்பம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது. 6.30 மணிக்கு குடங்கள் யாகசாலையிலிருந்து புறப்பட்டு கோயிலை சுற்றி வந்து 7 மணிக்கு மஹாகும் பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து, மூலவருக்கு மஹா சம்ப்ரோக்ஷனை நை டபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Next Story