search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குல்தீப் யாதவ்
    X
    குல்தீப் யாதவ்

    குறைந்த இலக்கை நிர்ணயித்து எங்களால் வெற்றி பெற முடியும் என்பதை காட்டியுள்ளோம்: குல்தீப் யாதவ்

    எதிரணிக்கு குறைந்த இலக்கை நிர்ணயித்து எங்களால் வெற்றி பெற முடியும் என்பதை காட்டியுள்ளோம் என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
    ஆப்கானிஸ்தானுக்கு 224 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ்க்கு 268 ரன்களும் வெற்றி இலக்காக நிர்ணயித்து அதற்குள் அவர்களை கட்டுப்படுத்த முடியும் என்பதை நாங்கள் காட்டிவிட்டோம் என இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில் ‘‘பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனதில் இருந்து கடந்து இரண்டு ஆண்டுகளாக அபாரமாக பந்து வீசி வருகிறார். அப்புறம் முகமது ஷமி இரண்டு போட்டியில்தான் விளையாடியுள்ளார். இரண்டிலும் அசத்தியுள்ளார். நாங்கள் சிறந்த வேகப்பந்து வீச்சு தாக்குதலை கொண்டுள்ளோம். அதேபோல் சிறந்த சுழற்பந்து வீச்சையும் கொண்டுள்ளோம்.

    பும்ரா முகமது ஷமி

    நாங்கள் அணியின் காம்பினேசனை பார்க்கிறோம். பந்து வீச்சு தாகுதலில் சிறப்பாக செயல்படுவது முக்கியமானது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 225 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி விட்டோம். இதுபோன்ற குறைந்த ரன்னுக்குள் எதிரணியை எங்களால் கட்டுப்படுத்த முடியும்.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடினோம். ஒரு கட்டத்தில் 250 ரன்களுக்கும் குறைவாகத்தான் எடுப்போம் என்ற நிலை இருந்தது. ஹர்திக் பாண்டியா, டோனி ஆட்டத்தில் சிறந்த ஸ்கோர் கிடைத்தது’’ என்றார்.
    Next Story
    ×