search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெத் ஓவர் பவுலர்கள் மீது நம்பிக்கை இருந்தது: இந்திய பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ் சொல்கிறார்
    X

    டெத் ஓவர் பவுலர்கள் மீது நம்பிக்கை இருந்தது: இந்திய பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ் சொல்கிறார்

    ஆப்கானிஸ்தான் போட்டியில் டெத் ஓவர் பவுலர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது என இந்திய பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. விராட் கோலி (67), கேதர் ஜாதவ் (52) ஆகியோரின் அரைசதத்தால் 224 ரன்கள் சேர்த்தது. பின்னர் 225 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது.

    ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் 45 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 30 பந்தில் 40 ரன்களே தேவைப்பட்டது. அப்போது முகமது நபி 35 ரன்களுடனும், ரஷித் கான் 10 ரன்களும் அடித்து நல்ல நிலையில் இருந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் வசம் மேட்ச் சென்றது.

    46-வது ஓவரில் சாஹல் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து ரஷித் கானை சாய்த்தார். 47-வது ஓவரில் பும்ரா 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி 18 பந்தில் 24 ரன்கள் தேவைப்பட்டது. ஷமி 48-வது ஓவரில் 3 ரன்களும், பும்ரா 49-வது ஓவரில் 5 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

    இதனால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ஷமி கடைசி ஓவரில் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்தி அணியை வெற்றி பெற வைத்தார்.

    இந்தியா வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், டெத் பவுலர்கள் மீது நம்பிக்கை இருந்தது என அரைசதம் அடித்த கேதர் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கேஜர் ஜாதவ் கூறுகையில் ‘‘உண்மையிலேயே நாங்கள் எங்களுடைய டெத் ஸ்பெஷலிஸ்ட் பந்து வீச்சாளர்களை நம்பினோம். பும்ரா நம்பர் ஒன் பந்து வீச்சாளர். ஆப்கானிஸ்தானின் ஒரு பார்ட்னர்ஷிப்பை வீழ்த்திவிட்டால், அடுத்த வரும் பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

    அதனால் முக்கியமான கட்டத்தில் ஒரு விக்கெட் தேவை என்பதை புரிந்து வைத்திருந்தோம். ஆடுகளம் ஸ்லோவாக இருந்தது. அவர்கள் நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினார்கள். பந்து டர்னிங் ஆகியதால், ஷாட்டுகள் ஆட கடினமாக இருந்தது.



    இதுபோன்ற ஆடுகளத்தில் எப்படிப்பட்ட ஷாட்டுகள் மூலம் ரன்கள் அடிக்க வேண்டும் என்பதை ஆராய வேண்டும். எங்களுடைய வழக்கமான திட்டம் 250 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்பதுதான். நாங்கள் 250 முதல் 260 வரையில் டார்கெட் நிர்ணயிக்க விரும்பினோம்.

    ஆனால், 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டனர். ஆகவே, பீல்டிங்கில் 20 முதல் 30 ரன்களை கட்டுப்படுத்த விரும்பினோம். உண்மையிலேயே, குறைந்த ஸ்கோருக்கும் எதிரணியை மடக்கிய பந்து வீச்சாளர்களுக்கே அனைத்து சிறப்புகளும்’’ என்றார்.
    Next Story
    ×