என் மலர்tooltip icon

    உலகம்

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால் கிரீன்லாந்தை கைப்பற்றுவோம் - டிரம்ப் மிரட்டல்
    X

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால் கிரீன்லாந்தை கைப்பற்றுவோம் - டிரம்ப் மிரட்டல்

    • கிரீன்லாந்து தீவு அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு முற்றிலும் அவசியமானது.
    • கிரீன்லாந்தை சுற்றியுள்ள கடல் பகுதிகள் தற்போது ரஷியா, சீனாகப்பல்களால் நிரம்பியுள்ளன.

    ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது.

    இதற்கிடையே பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    இதில் ராணுவ நட வடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். இதற்கு டென்மார்க் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால் கிரீன்லாந்தை கைப்பற்ற கடினமான வழியை தேர்வு செய்வோம் என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறிய தாவது:-

    கிரீன்லாந்து தீவு அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு முற்றிலும் அவசியமானது. உலகின் மிகப்பெரிய தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் தற்போது ரஷியா, சீனாகப்பல்களால் நிரம்பியுள்ளன.

    அவர்களுக்குப் பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி நாம் கிரீன்லாந்து விஷயத்தில் ஏதேனும் செய்யப் போகிறோம். ஏனென்றால் நாம் அதைச் செய்யா விட்டால் ரஷியாவோ அல்லது சீனாவோ கிரீன்லாந்தைக் கைப்பற்றிவிடும்.

    ரஷியாவையோ அல்லது சீனாவையோ நாம் அண்டை நாடாக வைத்திருக்க விரும்ப வில்லை. அந்த நாடுகள் கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதை நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை,

    நான் எளிமையான முறையில் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறேன். ஆனால் அது முடியாவிட்டால் கடினமான வழியில் அதை செய்வோம். பேச்சுவார்த்தை மூலம் கிரீன்லாந்தை இணைக்க முடியாவிட்டால் அமெரிக்கா கடுமையான வழியில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

    நான் டென்மார்க்கின் மிகப்பெரிய ரசிகன் தான். ஆனால் 500 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் ஒரு படகு அங்கு தரையிறங்கியது என்பதற்காக அந்த நிலம் அவர்களுக்கு சொந்தமானது என்று அர்த்தமல்ல. எங்களுடைய பல படகுகளும் அங்கு சென்றிருக்கின்றன. கிரீன்லாந்து எங்களுக்கு கண்டிப்பாக தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×