என் மலர்tooltip icon

    உலகம்

    VIDEO: துருக்கி அரசுடன் ஒப்பந்தம்.. ஆயுதங்களை கீழே போட்ட குர்திஸ்தான் பிரிவினைவாதிகள்!
    X

    VIDEO: துருக்கி அரசுடன் ஒப்பந்தம்.. ஆயுதங்களை கீழே போட்ட குர்திஸ்தான் பிரிவினைவாதிகள்!

    • வடக்கு ஈராக்கில் அடையாள விழா நடைபெற்றது.
    • 75 வயதான ஓகலன், 1999 முதல் துருக்கிய சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    துருக்கியுடனான சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈராக்கிய குர்திஷ் பிரிவினைவாதிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட தொடங்கியுள்ளனர்.

    இதற்காக நேற்று (வெள்ளிக்கிழமை) வடக்கு ஈராக்கில் ஒரு அடையாள விழா நடைபெற்றது. அதில் போராளிகள் தங்கள் ஆயுந்தங்களை மொத்தமாக போட்டு எரித்தனர்.

    கடந்த பிப்ரவரியில், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் (PKK) நிறுவனத் தலைவர் அப்துல்லா ஓகலன், ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அமைப்பைக் கலைக்க சிறையில் இருந்தபடி அழைப்பு விடுத்தார்.

    Abdullah ocalan

    75 வயதான ஓகலன், 1999 முதல் துருக்கிய சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அவரது விடுதலையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடத்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் நாற்பதாயிரம் மக்கள் உயிரிழந்த துருக்கிய-குர்திஷ் மோதல் இந்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

    Next Story
    ×