search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    காசாவில் மனிதாபிமான நிலைமைகள் மிகவும் மோசமடைந்து வருகின்றன: ஐ.நா. எச்சரிக்கை
    X

    காசாவில் மனிதாபிமான நிலைமைகள் மிகவும் மோசமடைந்து வருகின்றன: ஐ.நா. எச்சரிக்கை

    • தாக்குதலை அதிகப்படுத்துவதுதான் பிணைக்கைதிகள் விடுவிப்பதற்கான வழி என இஸ்ரேல் நம்புகிறது.
    • நிரந்தர போர் நிறுத்தம் செய்யப்பட்டால்தான் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை.

    காசாவில் மனிதாபிமான நிலைமைகள் மிகவும் மோசமடைந்து வருகிறது என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மனிதாபிமான உதவிகள் பாலஸ்தீன மக்களுக்கு கிடைக்கும் வகையில் இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

    காசாவின் வடக்கு பகுதிகளை மட்டுமே தாக்கிவந்த இஸ்ரேல் ராணுவம் தெற்குப் பகுதி, மத்தியப் பகுதி என அனைத்தும் இடங்களிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.

    காசாவில் மொத்தம் 2.3 மில்லியன் (23 லட்சம் மக்கள்) பாலஸ்தீனர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் 85 சதவீதம் பேர் வீட்டைவிட்டு வெளியேறி மருத்துவமனை, முகாம்களில் தங்கி வருகின்றனர். இவ்வாறு மருத்துவமனை, முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு போதுமான வகையில் உணவு அளிக்க முடியவில்லை என ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

    வடக்கு காசாவில் தாக்குதல் நடத்தியபோது, மக்கள் அனைவரும் தெற்குப் பதிகுதிக்கு இடம் பெயர்ந்தனர். தற்போது அங்கேயும் தாக்குதல் நடத்தப்படுகிறது. மருத்துவமனை, முகாம் என எல்லா இடத்திலும் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது இஸ்ரேல ராணுவம். இதனால் எங்கு செல்வது எனத் தெரியாமல் திண்டாடி வருகின்றனர்.

    இதற்கிடையே மனிதாபிமான உதவிப் பொருட்களை காசாவிற்குள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால். இதனால் உடனடியாக போரை நிறுத்தி, உதவிப் பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என ஐ.நா. இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.

    இதற்கிடையே, அமெரிக்கா பாராளுமன்ற அனுமதி பெறாமலேயே அவசரகால உதவி என்ற அடிப்படையில் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி வழங்கியுள்ளது.

    கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 போர் கொல்லப்பட்டனர்.

    இதனால் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசா முற்றிலும் சிதைந்துள்ளது. இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் சுமார் 9 ஆயிரம் பேர் சிறுமிகள் மற்றும் குழந்தைகள் ஆவார்கள்.

    போரின் நடுவே ஏழு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேல் நாட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்து சுமார் 300 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    Next Story
    ×