என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
    • விழாவின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இங்கிலாந்தில் நீண்ட ஆண்டுகள் வாழ்ந்த 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதையடுத்து அந்நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட அவரது மூத்த மகன் 3-ம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலாவின் முடிசூட்டு விழா இன்று (6-ந்தேதி) மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

    இந்த விழாவை உலகமே வியந்து பார்க்கும் வகையில் நடத்த பக்கிம்காம் அரண் மனை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த கோலாகல விழாவை காண ஒட்டு மொத்த இங்கிலாந்தும் இப்போதே தயாராகி வருகிறது. லண்டன் நகரம் விழாக்கோலம் பூண்டு உள்ளது.

    1981-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந்தேதி சார்லஸ்-மறைந்த டயானா திருமண நிகழ்ச்சி அனைவரும் வாய்பிளந்து பார்க்கும் வகையில் அமைந்து இருந்தது. இதேபோல நாளை நடைபெற உள்ள சார்லஸ் மற்றும் அவரது 2-வது மனைவி கமீலா முடிசூட்டு விழாவை இதுவரை நடைபெறாத வகையில் மிகபிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த விழாவில் இங்கிலாந்து மன்னர் சார்லசை அழைத்து செல்வதற்காக பாரம்பரியமிக்க சாரட்டு வண்டி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இந்த சாரட் வண்டி நான்காம் வில்லியம் ஆட்சி நடந்த 1831-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு முடிசூட்டு விழாவின் போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    1953-ம் ஆண்டு இந்த சாரட் வண்டியில் தான் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சாரட் வண்டி சுமார் 7 மீட்டர் நீளமும், 3 மீட்டர் உயரமும் கொண்டது. 4 டன் எடை கொண்ட இந்த சாரட் முற்றிலும் தங்க மூலாம் பூசப்பட்டதாகும்.

    இந்த வண்டி தற்போது புதுப்பிக்கப்பட்டு புத்துயிர் பெற்றுள்ளது. 70 ஆண்டுகளுக்கு பிறகு பாரம்பரிய முறைப்படி இந்த சாரட் வண்டி நாளை பயன்படுத்தப்பட உள்ளது. இந்த வண்டி முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டது ஆகும். அலங்க ரிக்கப்பட்ட 8 குதிரைகள் இதனை இழுத்துச்செல்லும். பாரம்பரியம் கொண்ட இந்த சாரட் வண்டியில் தான் இன்று மன்னர் சார்லசும், அவரது மனைவி கமீலாவும் பக்கிம்காம் அரண்மனை தேவாலயத்துக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார்கள்.

    இந்த அற்புதமான, அபூர்வமான காட்சியினை லட்சக்கணக்கான மக்கள் நேரடியாக கண்டுரசிக்க உள்ளனர். விழாவுக்காக இங்கிலாந்து மன்னர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த 700 ஆண்டு பழமையான தங்கமுலாம் பூசப்பட்ட சிம்மாசனம் தயாராகி உள்ளது. விழாவின் போது பாரம்பரிய முறைப்படி கையில் செங்கோலை ஏந்தி கையில் தடியுடன் மன்னர் சார்லஸ் இந்த சிம்மாசனத்தில் அமருவார்.

    அதன் பிறகு புனித எட்வர்டின் கிரீடம் அவரது தலையில் சூடப்படும். இன்றே மன்னரின் மனைவி கமீலா இங்கிலாந்து ராணியாக முறைப்படி அறிவிக்கப்படுவார்.

    இந்த விழாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். உலக தலைவர்கள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த தொண்டு நிறுவனம், சமூக குழுக்களை சேர்ந்த 850 பிரதிநிதிகள், இங்கிலாந்து பிரதமர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக், அவரது மனைவி அக்ஷரா மூர்த்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

    விழா நடைபெறும் பக்கிம்ஹாம் அரண்மனை முழுவதும் வாடாத மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட உள்ளது. மேலும் விழாவையொட்டி திங்கட்கிழமை (8-ந்தேதி) இங்கிலாந்தில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கண்ணைக்கவரும் வகையில் நடைபெற உள்ள இந்த முடி சூட்டுவிழா டி.வியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.

    இதனை கோடிக்கணக்கான மக்கள் கண்டுகளிக்க உள்ளனர். விழாவின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நாளை நடைபெறுகிறது.
    • இந்திய அரசு சார்பில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் நீண்ட காலம் ராணியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி மரணமடைந்தார். இந்த சூழலில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நடப்பு ஆண்டு மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது.

    இதில், பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். பிறகு, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும்.

    வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியில் நாளை அரசர் மூன்றாம் சார்லசின் முடி சூட்டு விழா நடைபெற உள்ளது. இதில் அவரது மனைவி கமீலாவும் கலந்து கொள்கிறார்.

    இதற்கிடையே, முடிசூட்டு விழாவில் ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மூன்றாம் சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக இந்திய அரசு சார்பில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இங்கிலாந்து சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

    • கோலாகல விழாவை காண ஒட்டு மொத்த இங்கிலாந்தும் இப்போதே தயாராகி வருகிறது.
    • விழாவில் இங்கிலாந்து மன்னர் சார்லசை அழைத்து செல்வதற்காக பாரம்பரியமிக்க சாரட்டு வண்டி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

    லண்டன்:

    சினிமாவில் தான் மன்னர் ஆட்சி, பிரமாண்டமான அரண்மனை, குதிரை பூட்டிய சாரட் வண்டி போன்ற காட்சிகளை நாம் பார்க்கலாம். ஆனால் இங்கிலாந்து நாட்டில் இந்த காலத்திலும் பாரம்பரியமிக்க இது போன்ற காட்சிகள் நிஜத்தில் அரங்கேறி வருவது பெருமைப்பட கூடிய விஷயம்.

    முடியாட்சி முறை போற்றி பாதுகாக்கப்படும் இங்கிலாந்தில் நீண்ட ஆண்டுகள் வாழ்ந்த 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதையடுத்து அந்நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட அவரது மூத்த மகன் 3-ம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலாவின் முடிசூட்டு விழா நாளை (6-ந்தேதி) மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

    இந்த விழாவை உலகமே வியந்து பார்க்கும் வகையில் நடத்த பக்கிம்காம் அரண் மனை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த கோலாகல விழாவை காண ஒட்டு மொத்த இங்கிலாந்தும் இப்போதே தயாராகி வருகிறது. லண்டன் நகரம் விழாக்கோலம் பூண்டு உள்ளது.

    1981-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந்தேதி சார்லஸ்-மறைந்த டயானா திருமண நிகழ்ச்சி அனைவரும் வாய்பிளந்து பார்க்கும் வகையில் அமைந்து இருந்தது. இதேபோல நாளை நடைபெற உள்ள சார்லஸ் மற்றும் அவரது 2-வது மனைவி கமீலா முடிசூட்டு விழாவை இது வரை நடைபெறாத வகையில் மிகபிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த விழாவில் இங்கிலாந்து மன்னர் சார்லசை அழைத்து செல்வதற்காக பாரம்பரியமிக்க சாரட்டு வண்டி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இந்த சாரட் வண்டி நான்காம் வில்லியம் ஆட்சி நடந்த 1831-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு முடிசூட்டு விழாவின் போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    1953-ம் ஆண்டு இந்த சாரட் வண்டியில் தான் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சாரட் வண்டி சுமார் 7 மீட்டர் நீளமும், 3 மீட்டர் உயரமும் கொண்டது. 4 டன் எடை கொண்ட இந்த சாரட் முற்றிலும் தங்க மூலாம் பூசப்பட்டதாகும். இந்த வண்டி தற்போது புதுப்பிக்கப்பட்டு புத்துயிர் பெற்றுள்ளது. 70 ஆண்டுகளுக்கு பிறகு பாரம்பரிய முறைப்படி இந்த சாரட் வண்டி நாளை பயன்படுத்தப்பட உள்ளது. இந்த வண்டி முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டது ஆகும். அலங்க ரிக்கப்பட்ட 8 குதிரைகள் இதனை இழுத்துச்செல்லும்.

    பாரம்பரியம் கொண்ட இந்த சாரட் வண்டியில் தான் நாளை மன்னர் சார்லசும், அவரது மனைவி கமீலாவும் பக்கிம்காம் அரண்மனை தேவால யத்துக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார்கள். இந்த அற்புதமான, அபூர்வமான காட்சியினை லட்சக்கணக்கான மக்கள் நேரடியாக கண்டுரசிக்க உள்ளனர்.

    விழாவுக்காக இங்கிலாந்து மன்னர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த 700 ஆண்டு பழமையான தங்கமுலாம் பூசப்பட்ட சிம்மாசனம் தயாராகி உள்ளது. விழாவின் போது பாரம்பரிய முறைப்படி கையில் செங்கோலை ஏந்தி கையில் தடியுடன் மன்னர் சார்லஸ் இந்த சிம்மாசனத்தில் அமருவார்.

    அதன் பிறகு புனித எட்வர்டின் கிரீடம் அவரது தலையில் சூடப்படும். நாளையே மன்னரின் மனைவி கமீலா இங்கிலாந்து ராணியாக முறைப்படி அறிவிக்கப்படுவார்.

    இந்த விழாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். உலக தலை வர்கள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த தொண்டு நிறுவனம், சமூக குழுக்களை சேர்ந்த 850 பிரதிநிதிகள், இங்கிலாந்து பிரதமர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக், அவரது மனைவி அக்ஷரா மூர்த்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

    விழா நடைபெறும் பக்கிம்ஹாம் அரண்மனை முழுவதும் வாடாத மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட உள்ளது. மேலும் விழாவையொட்டி திங்கட்கிழமை (8-ந்தேதி) இங்கிலாந்தில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கண்ணைக்கவரும் வகையில் நடைபெற உள்ள இந்த முடி சூட்டுவிழா டி.வியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. இதனை கோடிக்கணக்கான மக்கள் கண்டுகளிக்க உள்ளனர். விழாவின் போது அசம்பா வித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா வருகிற 6-ந்தேதி பக்கிம்காம் அரண்மனையில் நடக்கிறது.
    • 700 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட தங்க மூலாம் பூசப்பட்ட சிம்மாசனம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டை சுமார் 70 ஆண்டு காலம் ஆண்ட ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக 3-ம் சார்லஸ் அரியணை ஏறினார். ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா வருகிற 6-ந்தேதி (சனிக்கிழமை) பக்கிம்காம் அரண்மனையில் நடக்கிறது.

    மன்னரின் முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. 700 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட தங்க மூலாம் பூசப்பட்ட சிம்மாசனம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சிம்மாசனத்தில் தான் முடிசூட்டு விழாவின் போது 3-ம் சார்லஸ் பாரம்பரிய முறைப்படி கையில் செங்கோல், தடி ஏந்தி அரியணை ஏறுவார். மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்ட பிறகு 3-ம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்ட்டின் கிரீடம் சூட்டப்படும்.

    இதையடுத்து பக்கிம்காம் அரண்மனையின் பால்கனியில் இருந்தபடி மன்னர் 3-ம் சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

    அதே தினத்தில் இங்கிலாந்து ராணியாக கமீலா பார்க்கர் முறைப்படி அறிவிக்கப்பட உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேத்,மற்றும் மற்றொரு இளவரசர் ஹாரி அவரது மனைவி மேகன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில் உலக தலைவர்கள், அரசியல் கட்சி முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். முடி சூட்டு விழாவையொட்டி லண்டனில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 26 ஆயிரம் போலீசார் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

    புதிய மன்னராக பதவி ஏற்றபிறகு 3-ம் சார்லஸ் அரசு முறை பயணமாக இந்தியா வர விரும்புவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில் அதிபர் கரண் பிலிமோரியா தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும் போது, இந்தியா- இங்கிலாந்து இடையேயான நட்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் மன்னர் இந்த பயணத்தை மேற்கொள்ள இருப்பதாகவும், இந்தியாவை அவர் சிறந்த நட்பு நாடாக கருதுவதாகவும்,விரைவில் அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ள இருக்கும் பயணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்தார்.

    தற்போது 74 வயதான 3-ம் சார்லஸ் கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து இருந்தார். அப்போது அவர் மும்பையில் தனது 71- வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையின் நுழைவு வாயிலில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி தோட்டாக்களை வீசினார்.
    • துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவோ, அதிகாரிகள் அல்லது பொதுமக்களுக்கு காயம் ஏற்பட்டதாகவோ எந்த புகாரும் இல்லை.

    லண்டன்:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையின் நுழைவு வாயிலில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி தோட்டாக்களை வீசினார்.

    அந்த தோட்டாக்கள் அரண்மனையின் மைதானத்தில் விழுந்தது. உடனே அந்த நபரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டன. தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

    இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் தலைமை கண்காணிப்பாளர் ஜோசப் மெக் டொனால்ட் கூறும்போது, அரண்மனைக்குள் தோட்டாக்கள் வீசியது தொடர்பாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சந்தேகத்திற்குரிய பை ஒன்று இருந்தது.

    அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவோ, அதிகாரிகள் அல்லது பொதுமக்களுக்கு காயம் ஏற்பட்டதாகவோ எந்த புகாரும் இல்லை.

    இச்சம்பவத்தையடுத்து மூடப்பட்ட சாலைகள் சிறிது நேரத்துக்கு பிறகு திறக்கப்பட்டன என்றார்.

    இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ராணி கமீலாவின் முடிசூட்டு விழா வருகிற 6-ந்தேதி லண்டனில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில்தான் பக்கிங்காம் அரண்மனைக்குள் துப்பாக்கி தோட்டாக்கள் வீசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து மன்னரான சார்லஸ் வருகிற 6-ந் தேதி அதிகாரப்பூர்வமாக முடிசூட்டப்படுகிறார்.
    • இந்த விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பங்கேற்கபோவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    லண்டன் :

    இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்ப பதவிகளிலிருந்து விலகுவதாக கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்தனர். அதை தொடர்ந்து இருவரும் லண்டனில் இருந்து வெளியேறி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடிபெயர்ந்தனர்.

    இந்த சூழலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் மறைந்த நிலையில், அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஹாரி-மேகன் தம்பதி மீண்டும் அரண்மனைக்கு வந்தனர். இதன் மூலம் பிரிந்த குடும்பம் ஒன்றாக சேரும் என எதிர்பார்த்த நிலையில் அது நடக்கவில்லை. இந்த நிலையில் ராணியின் மறைவுக்கு பின்னர் இங்கிலாந்து மன்னரான சார்லஸ் வருகிற 6-ந் தேதி அதிகாரப்பூர்வமாக முடிசூட்டப்படுகிறார். இந்த விழாவில் பங்கேற்க ஹாரி- மேகன் தம்பதிக்கு அழைப்பு விடுக்கப்படுமா என யூகங்கள் எழுந்து வந்த நிலையில், இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை தற்போது விளக்கமளித்துள்ளது.

    அதன்படி மன்னரின் முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹாரி மட்டும் பங்கேற்பார் எனவும், மேகன் பங்கேற்கமாட்டார் எனவும் அரண்மனை தெரிவித்துள்ளது. இதனிடையே மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க அமெரிக்கா உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பங்கேற்கபோவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    அவருக்கு பதில் அவரது மனைவி ஜில்பைடன் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வார் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் மன்னரின் முடிசூட்டு விழாவை குறிக்கும் விதமாக லண்டனை சேர்ந்த சிற்பிகள் மற்றும் சாக்லேட் தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து 5 அடி உயரத்தில் மன்னர் சார்லசின் மார்பளவு சிலையை முழுவதும் சாக்லேட்டை பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர். சுமார் 3 ஆயிரம் சாக்லேட்களை உருக்கி செய்யப்பட்டுள்ள இந்த சிலை காண்போரை கவரும் வகையில் உள்ளது.

    • ஒரு மனைவியால் கணவரை எப்படி மாற்ற முடியும் என்று பாருங்கள்.
    • அந்த நாட்டின் மிக இளம் வயது பிரதமர் ரிஷி சுனக்தான்.

    லண்டன் :

    ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண்தான் இருக்கிறாள் என்று சொல்வது உண்டு.

    அந்த பெண்- தாயாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக, ஆசிரியையாக இருக்கலாம்.

    இது உண்மைதான்.

    பிரபல தொழில் அதிபரும், 'இன்போசிஸ்' தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனருமான என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவு தீயாகப் பரவுகிறது. அதில் சுதா மூர்த்தி கூறி இருப்பதாவது:-

    இது மனைவியின் மகிமை. ஒரு மனைவியால் கணவரை எப்படி மாற்ற முடியும் என்று பாருங்கள்.

    என் கணவரை (நாராயணமூர்த்தி) நான் தொழில் அதிபர் ஆக்கினேன். என் மகள், அவளது கணவரை (ரிஷி சுனக்) இங்கிலாந்து நாட்டுக்கு பிரதமர் ஆக்கி இருக்கிறாள்.

    இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

    இந்திய வம்சாவளியான ரிஷி சுனக், 2009-ம் ஆண்டு, என்.ஆர்.நாராயணமூர்த்தி-சுதா தம்பதியரின் மகள் அக்ஷதா மூர்த்தியை காதலித்து மணந்தார்.

    கடந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் (வயது 42) உயர்ந்தார். அந்த நாட்டின் மிக இளம் வயது பிரதமர் ரிஷி சுனக் தான்.

    • இங்கிலாந்தில் உள்ள சீக்கியர்கள் இடையே பிளவை ஏற்படுத்த காலிஸ்தான் குழுக்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சீக்கியர்களிடையே பதற்றத்தை உருவாக்கி இந்தியாவுக்கு எதிராக உணர்வுகளை தூண்டுகின்றன.

    லண்டன்:

    இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் முன்பு சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்தியாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் கைது செய்ய முயற்சித்ததை கண்டித்து நடந்த போராட்டத்தில் இந்திய தூதரகத்தில் இருந்த தேசிய கொடி அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து மேலும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள சீக்கியர்கள் இடையே பிளவை ஏற்படுத்த காலிஸ்தான் குழுக்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் காலின் ப்ரூம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காலிஸ்தான் குழுக்கள், இங்கிலாந்தில் அதிகாரத்தை விரும்புகின்றன. இதனால் சீக்கியர்களிடையே பதற்றத்தை உருவாக்கி இந்தியாவுக்கு எதிராக உணர்வுகளை தூண்டுகின்றன. அவர்கள் ஒரு பெரிய பிளவை உருவாக்க விரும்புகிறார்கள். இதனால் அதிக பதற்றம் உருவாக்கப்படுகிறது. இது இறுதியில் அதிகார போராட்டத்திற்கு வழி வகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    • லண்டனில் ஜெகன்நாத் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்படுகிறது.
    • இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் இதுவரை கோவில் கட்ட அதிக நிதியை யாரும் வழங்கியதில்லை.

    லண்டன்:

    ஒடிசாவை சேர்ந்தவர் பிஸ்வநாத் பட்நாயக். தொழிலதிபர். பைனஸ்ட் கம்பெனியின் நிறுவனரான இவர் லண்டனில் கோவில் கட்ட ரூ.250 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இந்நிதியில் லண்டனில் ஜெகன்நாத் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்படுகிறது.

    அட்சய திருதியையொட்டி இந்த நிதியுதவியை அவர் வழங்கினார்.

    இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் இதுவரை கோவில் கட்ட அதிக நிதியை யாரும் வழங்கியதில்லை. இவர்தான் முதன்முதலில் ரூ.250 கோடி வழங்கி யுள்ளார். இந்த கோவில் கட்ட ரூ.70 கோடியில் 15 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. லண்டனின் புறநகரில் இந்த கோவில் கட்டப்படுகிறது.

    • அடுத்த மாதம் 6-ந்தேதி, மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா நடைபெறுகிறது.
    • கோஹினூர் வைரத்தின் எடை 105.6 கேரட்.

    லண்டன் :

    இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து, மக்களின் மனங்களையும் கவர்ந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந் தேதியன்று ஸ்காட்லாந்தில் உள்ள பால் மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார்.

    அதைத் தொடர்ந்து அவரது மூத்த மகனும், பட்டத்து இளவரசருமான சார்லஸ் (வயது 73), அந்த நாட்டின் மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அவர் மன்னர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. அப்படியே அழைக்கப்படுகிறார்.

    அடுத்த மாதம் 6-ந் தேதி, மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா லண்டனில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது.

    இந்த முடிசூட்டும் விழாவில் மறைந்த ராணியும், தனது மாமியாருமான இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தைத்தான், ராணி கமீலா பார்க்கர் அணிவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அதை அவர் அணியப்போவதில்லை என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

    ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த கிரீடத்துக்கு பதிலாக ராணி மேரி அணிந்திருந்த கிரீடத்தைத்தான் ராணி கமீலா பார்க்கர் அணியப்போகிறார் என உறுதியாகி இருக்கிறது.

    இந்த கோஹினூர் வைரம், இந்தியாவில் பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தில், கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும். இதன் எடை 105.6 கேரட். இந்த வைரத்தை சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் வைத்திருந்தார் என்றும், அது 1857-ம் ஆண்டு நடந்த கிளர்ச்சிக்குப் பின்னர் விக்டோரியா மகாராணிக்கு வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது மிகவும் விலை உயர்ந்ததாகும்.

    இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரத்தை இங்கு மீட்டுக்கொண்டு வர வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தது. ஆனால், இந்த வைரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என இங்கிலாந்து திட்டவட்டமாக அறிவித்து விட்டது. ஆனாலும் சர்ச்சை இன்னும் முடிந்தபாடில்லை.

    இந்த நிலையில்தான் ராணி கமீலா பார்க்கர், இந்த வைரம் பதித்த கிரீடத்தை அணிவதைத் தவிர்த்துள்ளார்.

    இதன் பின்னணி குறித்து பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

    *கோஹினூர் வைரம் சர்ச்சைக்குரியதாக இருக்கலாம் என்று அரண்மனை அறிந்து இருக்கிறது. எனவே முடிசூட்டும் விழாவில் ராணி கமீலா பார்க்கர் அந்தக் கிரீடத்தை அணிந்து, அது ஒரு சர்ச்சை ஆக வேண்டாம் என்று அரண்மனை நினைக்கிறது.

    * அடிப்படையில், கிரீடத்தில் உள்ள நகைகளைப் பற்றி தனி விவாதம் செய்யாமல், பாதுகாப்பான மற்றும் விவேகமான காரியத்தைச் செய்ய அரண்மனை முடிவு செய்துள்ளது.

    * முடிசூட்டும் விழா முடிந்தவரையில், பலதரப்பட்ட சமூக நம்பிக்கைகளையும் பிரதிபலிக்க வேண்டும் என்பதுதான் மன்னரின் விருப்பமாகத் தெரிகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மே 6-ந்தேதி மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா நடைபெறவுள்ளது.
    • இந்த இந்திய ஓட்டல் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    லண்டன் :

    இங்கிலாந்தை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்த ராணி 2-ம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி அன்று ஸ்காட்லாந்து அரண்மனையில் மரணம் அடைந்தார். அதற்கு பிறகு, இங்கிலாந்தின் மன்னராக சார்லஸ் அரியணை ஏறினாலும், அதிகாரபூர்வமாக அவர் இதுவரை முடிசூட்டிக்கொள்ளவில்லை.

    அவரது முடிசூட்டு விழா அடுத்த மாதம் (மே) 6-ந்தேதி நடைபெறவுள்ளது. 70 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் பாரம்பரிய விழா என்பதால் லண்டன் நகரம் இப்போதிலிருந்தே விழாக்கோலம் பூண்டு வருகிறது.

    முடிசூட்டு விழாவின்போது லண்டன் வீதிகளில் சிறப்பு விருந்து, கச்சேரி உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் லண்டனில் இயங்கி வரும் சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்திய ஓட்டல் ஒன்று கவனம் பெற்று வருகிறது.

    லண்டனில் மையப்பகுதியில் கடந்த 1926-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'வீராசாமி' ஓட்டல் இந்தியா-இங்கிலாந்து இடையிலான உணவு கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக ஆங்கிலோ-இந்திய உணவு வகைகளை வழங்கி வருகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஓட்டலின் பின்னணியில் இருக்கும் பெண் தொழிலதிபர் கேமிலியா பஞ்சாபி மற்றும் இந்திய சமையல் வரலாற்றாசிரியர் மற்றும் எழுத்தாளரான அனுதி விஷால் ஆகிய இருவரும் இணைந்து இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான சமையல் தொடர்புகளை கவனத்தில் கொள்ளும் விதமாக ஆங்கிலோ-இந்திய உணவு வகைகளை தயாரித்து வழங்கி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் டேங்கர் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • வாகன நெரிசல் மிக்க தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    லண்டன்:

    லண்டனில் கனெக்டிகட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அருகில் சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்து டேங்கர் லாரி மீது வேகமாக மோதியது.

    இதில் டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் டேங்கர் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

    வாகன நெரிசல் மிக்க தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீப்பற்றி எரிந்த டேங்கர் லாரியில் இருந்து கரும்புகை பரவி அந்த பகுதியே புகை சூழ்ந்து காணப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். படுகாய மடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பாலத்தின் மீது டேங்கர் லாரி தீப்பற்றி எரியும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    ×