என் மலர்tooltip icon

    துருக்கி

    • சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு பணியாற்றிய 14 தொழிலாளர்கள் பலியாகினர்.
    • மேலும் இடிபாடுகளில் சிக்கிய 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    அங்காரா:

    துருக்கியின் வடக்குப் பகுதியில் செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கத்தில் இன்று தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தனர்.

    அப்போது சுரங்கத்தின் ஒரு பகுதியில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், சுரங்க வெடி விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர் என உள்துரை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சுரங்கத்தினுள் சிக்கிய 20 பேரை மீட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

    மீத்தேன் வாயு உருவானதே வெடி விபத்துக்கு காரணம் என சுரங்கத் தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 14 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • விபத்து பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் மீது மற்றொரு பேருந்து மோதியது.
    • அவசர கால பணியாளர்கள், பத்திரிகையாளர்களும் பலியாகினர்.

    இஸ்தான்புல்:

    துருக்கி நாட்டின் தென்கிழக்கு மாகாணமான காசியான்டெப் பகுதியில் நேற்று பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

    விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணியில் தீயணைப்புப் படையினர் மருத்துவக் குழுக்கள் மற்றும் பிற குழுவினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது மற்றொரு பேருந்து மோதியது.

    இதையடுத்து இரு விபத்துக்களிலும் சேர்த்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக துருக்கிய சுகாதார அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகா தெரிவித்துள்ளார்.

    இதில் அவசர கால பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் பலியாகினர். காயமடைந்த 29 பேரில் எட்டு பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

    ×