என் மலர்
உலகம்

Trump | வெற்றி, வெற்றி, வெற்றி... ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றதாக டிரம்ப் அறிவிப்பு
- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
- மோதல் காரணமாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அணுசக்தி போட்டி காரணமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் ஈரான் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளின் தொடர் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் மோதல் காரணமாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலை சீரற்ற நிலையில் உள்ளது. பல நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், ஈரான் புரட்சிகர காவல் படை இடையே காரசார கருத்து பரிமாற்றம் நடந்து வருகிறது.
அதன்படி ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர, போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கவும், ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரிக்கவும், எதிர்கால ஆக்கிரமிப்புக்கு எதிராக உறுதியான சர்வதேச உத்தரவாதங்களை தெஹ்ரான் விரும்புவதாகவும், இந்த நிபந்தனைகள் ஏற்கப்பட வேண்டும் என்று ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் தெரிவித்தார்.
முன்னதாக, "அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரில் திறம்பட வெற்றி பெற்றதாக கூறினார். தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களுக்குள் விளைவு தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்க படைகள் பணியை முடிக்க தொடர்ந்து ஈடுபடும்.
அமெரிக்க இராணுவம் ஏற்கனவே வெற்றியைப் பெற்றுள்ளது, ஆனால் அமெரிக்கா முன்கூட்டியே பின்வாங்காது," என்று கென்டக்கியின் ஹெப்ரானில் நடந்த நிகழ்வில் பேசிய டிரம்ப் தெரிவித்தார்.






