என் மலர்
உலகம்

Iran War | இதற்கு OK சொன்னால் போரை நிறுத்திக் கொள்ளலாம் - ஈரான் அறிவிப்பு
- அணு ஆயுதத்தைத் தேடுவதாக குற்றம் சாட்டுகின்றன.
- போர் இன்று 13வது நாளை எட்டியுள்ளது.
ஈரானிய அதிபர் மசூத் பெசஸ்கியன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மூன்று நிபந்தனைகளை அறிவித்துள்ளார். மேலும் வளைகுடா அரபு நாடுகளுக்கு எதிரான டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து நேற்று (புதன்கிழமை) இரவு எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கவும், ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரிக்கவும், எதிர்கால ஆக்கிரமிப்புக்கு எதிராக உறுதியான சர்வதேச உத்தரவாதங்களை தெஹ்ரான் விரும்புகிறது," என்று கூறினார்.
"ரஷியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசியபோது, பிராந்தியத்தில் அமைதிக்கான ஈரானின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன். சியோனிச ஆட்சி மற்றும் அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்ட இந்த போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி, ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரிப்பது, இழப்பீடுகளை வழங்குவது மற்றும் எதிர்கால ஆக்கிரமிப்புக்கு எதிரான உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள் தான்" என்று அவர் கூறினார்.
"ஈரானின் சட்டபூர்வமான உரிமைகள்" என்றால் என்ன என்பதை அவர் விரிவாகக் கூறவில்லை என்றாலும், அமைதியான அணுசக்தி திட்டத்தை உருவாக்குவதற்கான உரிமை அதற்கு உள்ளது என்று அந்த நாடு பலமுறை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் அந்த நாடு அணு ஆயுதத்தைத் தேடுவதாக குற்றம் சாட்டுகின்றன.
குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில், போர் இன்று (வியாழக்கிழமை) 13வது நாளை எட்டியுள்ளது.






