என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவில் பஸ்சுக்காக காத்து நின்றவர்கள் மீது கார் மோதி 7 பேர் பலி
    X

    அமெரிக்காவில் பஸ்சுக்காக காத்து நின்றவர்கள் மீது கார் மோதி 7 பேர் பலி

    • தாறுமாறாக வேகமாக வந்த கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
    • விபத்தை ஏற்படுத்தி 7 பேர் உயிரை பறித்த கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாஷிங்டன்

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பிரவின்சிலெவி நகரத்தில் உள்ள ஓசனம் பகுதியில் புலன் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்து நின்றனர்.

    25-க்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது தாறுமாறாக வேகமாக வந்த கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 7 தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் தீயணைப்பு படை மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தை ஏற்படுத்தி 7 பேர் உயிரை பறித்த கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையிலேயே கார் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நடந்ததா? அல்லது சதி வேலை காரணமாக திட்டமிட்டு காரை ஏற்றி தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×