search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கனடாவில் படிக்க சென்ற இந்திய பெண்ணுக்கு ஆதரவு கொடுத்த பிரபல நிறுவன அதிகாரி
    X

    கனடாவில் படிக்க சென்ற இந்திய பெண்ணுக்கு ஆதரவு கொடுத்த பிரபல நிறுவன அதிகாரி

    • வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் ஏக்தாவை கடுமையாக விமர்சித்து பதிவிட்டனர்.
    • பிரபல நிறுவனமான ட்ரூகாலர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஆலன் மமேதி, ஏக்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

    கனடாவில் கல்வி கற்பதற்காக சென்ற இந்தியாவை சேர்ந்த ஏக்தா என்ற இளம்பெண் ஒருவர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் அதிக விமர்சனத்துக்கு உள்ளானார். அவரிடம் நீங்கள் எதற்காக கனடா வந்தீர்கள்? என ஒருவர் கேள்வி கேட்ட போது, அதற்கு அந்த பெண் இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டில் ஒரு வேலையை தொடங்குவது தான் எனது லட்சியம் என கூறியிருந்தது தான் அதற்கு முக்கிய காரணம். மேலும் அந்த இளம்பெண், கனடாவில் சூரியன் உதிப்பதையும், மறைவதையும் பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்றும் அவர் கூறியிருந்தார். அவரது இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து பதிவிட்டனர்.

    அதில் ஒருவர், சூரியன் உதிப்பதையும், மறைவதையும் இந்தியாவில் பார்க்க முடியாதா? எனவும், மற்றொருவர், நான் கனடாவில் ஒரு ஆண்டு வாழ்ந்தேன். கோடையில் நன்றாக இருந்தது. ஆனால் குளிர்காலம் பயங்கரமாக இருந்தது என கூறியிருந்தார். இதே போன்று பயனர்கள் பலரும் ஏக்தாவை கடுமையாக விமர்சித்து பதிவிட்டனர்.

    இந்நிலையில் பிரபல நிறுவனமான ட்ரூகாலர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஆலன் மமேதி, ஏக்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். மேலும் அவர் தனது பதிவில், உங்கள் படிப்பை முடித்ததும் நீங்கள் உலகில் எந்த நாட்டில் உள்ள ட்ரூகாலர் அலுவலகத்தில் விரும்பினாலும் பணி செய்யலாம் என்று கூறி உள்ளார். இந்நிலையில் ஆலன், ஏக்தாவுக்கு ஆதரவு அளித்ததையும் விமர்சித்து பயனர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×