என் மலர்
உலகம்

சவுதி அரேபிய பாலைவனத்தில் முதல் முறையாக பனிப்பொழிவு - வீடியோ
- சவுதி அரேபியாவில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல காட்சி அளிக்கிறது.
- அரபி கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே இந்த பனிபொழிவிற்கு காரணம்
சவுதி அரேபியாவின் அல்-ஜாவ்ஃப் பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல இருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சவுதி அரேபிய பாலைவனத்தில் முதல் முறையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
அரபி கடலில் இருந்து உருவாகி ஓமன் வரை நீண்டு இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே இந்த பனிபொழிவிற்கு காரணம் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளித்த பாலைவனத்தில் தற்போது பனிப்பொழிவும் நிகழ்ந்துள்ளது.
Next Story






