என் மலர்
உலகம்

சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற பொதுத்தேர்தல்!
- அதன்படி சிங்கப்பூரில் இன்று 97 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.
- ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வருகிறது.
சிங்கப்பூரில் இன்று பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடந்தது. இதில், 97 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாகவும், 12 உறுப்பினர்கள் நியமன அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதன்படி சிங்கப்பூரில் இன்று 97 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. 30 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் போட்டி நிலவுகிறது.
அதேவேளையில் ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. சிங்கப்பூர் பிரதமராக லாரன்ஸ் வோங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. மாலை வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை உடனே தொடங்கப்படும்.
கடந்த 2020-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி 83 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் 150 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடந்தது.
மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இந்த தேர்தலில் அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும், பீட்டர் டட்டன் தலைமையிலான லிபரல் நேஷனல் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.






