search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உங்களுக்கு பதிலாக ஆண் உறவினர்களை வேலைக்கு அனுப்புங்கள்: பெண் ஊழியர்களிடம் கூறிய தலிபான்கள்
    X

    உங்களுக்கு பதிலாக ஆண் உறவினர்களை வேலைக்கு அனுப்புங்கள்: பெண் ஊழியர்களிடம் கூறிய தலிபான்கள்

    • ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக் கூடாது.
    • பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்து வருகின்றனர்.

    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்து வருகின்றனர். பெண்கள் மேல் நிலைக் கல்வி பயில தடை, பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக் கூடாது, பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் போது தங்கள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என அங்கு ஏற்கனவே பல கடுமையான உத்தரவுகளை தலிபான்கள் பிறப்பித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண் ஊழியர்கள் தங்களுக்கு பதில் அந்த வேலையைச் செய்ய அவர்களின் ஆண் உறவினரை அனுப்புமாறு தலிபான்கள் கேட்டு கொண்டுள்ளதாக ஆங்கில செய்தி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அங்குள்ள பெண் அரசாங்க ஊழியர் ஒருவருக்கு தலிபான் அதிகாரிகளிடமிருந்து அழைப்பு வந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்துள்ளதால் பெண்களுக்கு பதிலாக ஆண்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என தலிபான்கள் தெரிவித்ததாக நிதித்துறையில் பணிபுரியும் அந்த பெண் தெரிவித்துள்ளார். 15 ஆண்டுகளாக தான் பணியாற்றிய ஒரு பதவிக்கு மாற்றாக ஒரு ஆண் நபரை பரிந்துரைக்கும்படி அந்த நாட்டின் மனித வளத்துறையிலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக அந்தப் பெண் கூறியுள்ளார்.

    Next Story
    ×