என் மலர்tooltip icon

    உலகம்

    செயல்பாட்டுக்கு வந்தது அணுஆயுதங்களை சுமந்து செல்லும் ஒரேஷ்னிக் ஏவுகணை: ரஷியா அறிவிப்பு
    X

    செயல்பாட்டுக்கு வந்தது அணுஆயுதங்களை சுமந்து செல்லும் ஒரேஷ்னிக் ஏவுகணை: ரஷியா அறிவிப்பு

    • கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி பரிசோதனை நடத்தியது.
    • ரஷியாவின் அண்டை நாடான பெலாரசில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

    ஆணுஆயுதங்களை சுமந்து சென்று எதிரிகளின் இலக்குகளை துல்லியதாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஒரேஷ்னிக் ஏவுகணைகள் செயல்பாட்டிற்கு வந்ததாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளார். மேலும், ரஷியா- உக்ரைன் இடையிலான போர் நிறுத்துவதற்கான வழிகளை தேடும் பேச்சுவார்த்தை தொடர்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

    ரஷியாவின் ஆதரவு தெரிவிக்கும் அண்டை நாடான பெலாரஸில் ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் ரஷிய ராணுவ வீரர்கள் இடையே ஒரு குறுகிய விழாவை நடத்தியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ரஷியா- உக்ரைன் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் முக்கியமான நேரத்தில் ரஷியா இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஏவுகணையின் திறனை ரஷிய அதிபர் புதின் பாராட்டியுள்ளார்.

    இந்த மாத தொடக்கத்தில், போர்க்களத்தில் ஒரேஷ்னிக் ஏவுகணை விரைவில் நுழையும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உக்ரைனுக்கு எதிராக இந்த ஏவுகணையை பரிசோதனை அடிப்படையில் பயன்படுத்தியது. உக்ரைன் சோவியத் ரஷியாவுடன் இருக்கும்போது, ஏவுகணைகள் தயாரிக்கும் டினிப்ரோவில் உள்ள ஆயுத தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தி பரிசோதனை செய்தது.

    இந்த ஏவுகணையை இடைமறிப்பது கடினம் எனக் கூறப்படுகிறது.

    Next Story
    ×