என் மலர்tooltip icon

    கத்தார்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கத்தார் நாட்டுடனான வர்த்தகத்திற்கு இந்திய தூதரகம் மூலம் ஏற்பாடு
    • ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் காணொலி வாயிலாக பங்கேற்பு

     தோஹா:

    இந்திய வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கத்தார் நாட்டுடனான வர்த்தகம் குறித்து தோஹாவில் உள்ள இந்திய தூதரகமும் மற்றும் இந்திய வர்த்தக தொழில்துறை குழுமம் இணைந்து இந்திய ஏற்றுமதியாளர்கள் சந்திப்பை நடத்தியது.

    புவிசார் குறியீடு பெற்றுள்ள வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி குறித்து காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை குழுமத்தைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்திய தூதரக மற்றும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு, ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

    இந்த சந்திப்பின்போது பாசுமதி அரிசி, மாம்பழம், மாதுளம்பழம், வழகிழக்கு பிராந்தியப் பொருட்கள் மற்றும் பல்வேறு பதப்படுத்தப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புக் குறித்து ஏற்றுமதியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டல், இந்தியா- கத்தார் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவரித்தார்.

    தொடர்ந்து பேசிய மத்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணைய தலைவர் அங்கமுத்து, புவிசார் குறியீடு உடைய பொருட்கள் மற்றும் இயற்கை தயாரிப்புகளை ஊக்கப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

    • துபாயில் இருந்து இப்போது இந்தியாவுக்கு வாரத்திற்கு 183 விமான சேவை இருந்து வருகிறது.
    • விமான சேவைக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக இந்தியா பரீசிலனை செய்ய வேண்டும்.

    கத்தார்:

    இந்தியாவில் இருந்து துபாய்க்கு வேலை தேடி செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேபோல் சுற்றுலா செல்வதற்கும் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

    அபுதாபி, கத்தார், ஏமன், சார்ஜா ஆகிய பகுதிளில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

    இதையடுத்து துபாய் நாட்டில் இருந்து அதிக விமானங்களை இயக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. துபாயில் இருந்து தற்போது இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, ஆமதாபாத், பெங்களூரு, சென்னை, ஐதராபாத், கொச்சி, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 9 நகரங்களுக்கு விமான சேவை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் அமிர்தசரஸ், திருச்சி, கோவை , கண்ணூர், கோவா, புவனேசுவர், கவுகாத்தி, புனே ஆகிய நகரங்களுக்கு விமான சேவையை தொடங்க துபாய் தீவிரம் காட்டி வருகிறது.

    இது தொடர்பாக துபாய் விமான போக்குவரத்து ஆணைய இயக்குனர் முகமது அலி இந்திய விமானத்துறை மந்திரி ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதி உள்ளார்.

    அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

    துபாயில் இருந்து இப்போது இந்தியாவுக்கு வாரத்திற்கு 183 விமான சேவை இருந்து வருகிறது.

    2014-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி தற்போது 65,200 விமான இருக்கைகள் உள்ளன.

    கடந்த 7 ஆண்டுகளாக இந்தியா-துபாய் இடையே விமான சேவை நல்ல வளர்ச்சியை பெற்று உள்ளது. சரக்கு விமான போக்குவரத்து மூலம் 2 நாடுகளுக்கும் நல்ல லாபமும் கிடைத்து வருகிறது.

    இதனால் இந்தியாவுக்கு மேலும் விமான சேவை தொடங்க துபாய் ஆர்வமாக உள்ளது. வாரம்தோறும் 50 ஆயிரம் விமான இருக்கைகளை அதிகரிக்கவும் உள்ளோம். விமான சேவைக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக இந்தியா பரீசிலனை செய்ய வேண்டும்.

    இரு நாட்டு விமான போக்குவரத்து ஆணைய பிரதிநிதிகள் சந்தித்து பேசுவது தொடர்பாக முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • உலக கோப்பை கால்பந்து போட்டியில் நம்பர் ஒன் அணியான பிரேசில் ஜி பிரிவில் இடம் பிடித்துள்ளது.
    • முன்னாள் சாம்பியன்கள் ஸ்பெயின், ஜெர்மனி ஆகியவை இ பிரிவில் இடம் பிடித்துள்ளன.

    தோஹா:

    32 அணிகள் பங்கேற்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20-ம் தேதி கத்தாரில் நடைபெறுகிறது.

    இந்தப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:

    ஏ பிரிவில் கத்தார், ஈகுவடார், செனகல், நெதர்லாந்து

    பி பிரிவில் இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

    சி பிரிவில் அர்ஜென்டினா, சவுதிஅரேபியா, மெக்சிகோ, போலந்து

    டி பிரிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், டென்மார்க், துனிசியா, ஆஸ்திரேலியா

    இ பிரிவில் முன்னாள் சாம்பியன்கள் ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் ஜப்பான், கோஸ்டாரிகா

    எப் பிரிவில் பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா

    ஜி பிரிவில் பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்

    எச் பிரிவில் போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

    இந்நிலையில், உலக கோப்பையை நடத்தும் கத்தார், ஈகுவடார் அணிகள் நவம்பர் 20-ம் தேதி மோதுகின்றன என பிபா தெரிவித்துள்ளது.

    • கத்தாா் நாட்டிற்கு 3 நாள் அரசு முறை பயணமாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்று உள்ளாா்.
    • இந்தியா-கத்தார் ஸ்டார்ட்-அப் பாலத்தை துணை ஜனாதிபதி தொடங்கி வைத்துப் பேசினார்.

    தோகா:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 3 நாடுகளுக்கான தமது சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமரும் உள்துறை மந்திரியுமான ஷேக் காலித் பின் அப்துல் அஜிஸ் அல் தானியை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    வர்த்தகம், முதலீடு, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

    இந்தியா-கத்தார் ஸ்டார்ட்-அப் பாலத்தை தொடங்கி வைத்து பேசிய வெங்கையா நாயுடு, கத்தாருடன் இந்தியா மிகவும் வலுவான பொருளாதாரக் கூட்டணியை கொண்டுள்ளது. அது வளமடைந்து வருகிறது என தெரிவித்தார்.

    மேலும், இந்தியா-கத்தார் வணிக நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், அங்கு வாழும் இந்திய தொழிலதிபா்களைச் சந்தித்து அவா்களுடன் கலந்துரையாடினாா்.

    இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தோகாவில் உள்ள கத்தாா் தேசிய அருங்காட்சியகத்திற்குச் சென்று பாா்வையிட்டாா்.

    • கத்தாருக்கு பயணம் மேற்கொண்ட குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு, அந்நாட்டு பிரதமரை சந்தித்தார்.
    • இந்தியாவின் எரிவாயுத் தேவைகளில் 40 சதவீதத்தை கத்தார் பூர்த்தி செய்கிறது.

    தோஹா:

    குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மூன்று நாடுகளுக்கான தமது பயணத்தின் கடைசிக் கட்டமாக கத்தார் சென்றுள்ளார். நேற்று கத்தார் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் அப்துல்அஜிஸ் அல் தானியுடன் வெங்கையா நாயுடு பேச்சு நடத்தினார்.

    அப்போது பேசிய அவர், இந்தியாவில் கத்தாரின் முதலீடு மார்ச் 2020ல் இருந்து ஐந்து மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது என்று பாராட்டினார். கத்தாரில் சுகாதாரத் துறையில் இந்திய சுகாதார வல்லுநர்கள் ஆற்றிய பங்களிப்பை அவர் நினைவு கூர்ந்தார்.

    இந்தியா அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு அதிக எண்ணிக்கையிலான மருந்துகளை வழங்குகிறது என்றும், பாரம்பரிய மருத்துவத் துறையில் கத்தாருடன் இணைந்து பணியாற்றுவதில் இந்தியாவும் மகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டார்.

    இந்தியாவின் எரிவாயுத் தேவைகளில் 40 சதவீதத்தை கத்தார் பூர்த்தி செய்வதாக குறிப்பிட்ட அவர், எரிசக்தி பாதுகாப்பில் கத்தாரின் பங்கை இந்தியா ஆழமாக மதிக்கிறது என்றார்.

    இதை தொடர்ந்து தோஹாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா-கத்தார் ஸ்டார்ட்-அப் பாலத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கத்தாருடன் இந்தியா மிகவும் வலுவான பொருளாதாரக் கூட்டணியை கொண்டுள்ளது, மேலும் அது வளமடைந்து வருகிறது என்றார்

    ×