என் மலர்tooltip icon

    உலகம்

    கனடா பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி குரோஷியா சென்றடைந்தார்
    X

    கனடா பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி குரோஷியா சென்றடைந்தார்

    • கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் ஜி7 உச்சி மாநாடு நடந்தது.
    • ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

    ஒட்டாவா:

    பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    பயணத்தின் முதல் கட்டமாக அவர் கடந்த 15-ம் தேதி சைப்ரஸ் சென்றார். அங்கு அந்நாட்டு ஜனாதிபதி கிறிஸ்டோடவுலிட்சை பிரதமர் மோடி சந்தித்தார்.

    இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி கனடா சென்றார். கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் நேற்று நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் கனடா பிரதமர், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

    இந்நிலையில், கனடா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு குரோஷியா சென்றடைந்தார். ஜாக்ரெப் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    குரோஷியா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் சோரன் மிலனொவ் மற்றும் பிரதமர் பிளென்கோவிக்கை சந்திக்கிறார்.

    இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

    Next Story
    ×