என் மலர்tooltip icon

    உலகம்

    VIDEO: பாகிஸ்தானில் பெண் மற்றும் குழந்தைகளை தாக்கிய வளர்ப்பு சிங்கம்
    X

    VIDEO: பாகிஸ்தானில் பெண் மற்றும் குழந்தைகளை தாக்கிய வளர்ப்பு சிங்கம்

    • சிங்கத்தை வளர்த்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • பாகிஸ்தானில் சிங்கங்களை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது கவுரமாக பார்க்கப்படுகிறது

    பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகளை வளர்ப்பு சிங்கம் ஒன்று தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த வீடியோவில், ஒரு கட்டடத்தின் சுவர் மீது ஏறி வீதியில் குதித்த சிங்கம் அவ்வழியே வந்து கொண்டிருந்த பெண் மீது பாய்ந்து தாக்கியது பதிவாகியுள்ளது. தனது 2 குழந்தைகளையும் இந்த சிங்கம் தாக்கியதாக தந்தை ஒருவர் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக சிங்கத்தை வளர்த்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். லாகூரில் மக்களைத் தாக்கிய 11 மாத சிங்கம், போலீசாரால் கைப்பற்றப்பட்டு வனவிலங்கு பூங்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் சிங்கங்களை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது கவுரமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×