என் மலர்tooltip icon

    உலகம்

    இம்ரான் கான் ஆதரவாளர்கள் 166 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை - பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி
    X

    இம்ரான் கான் ஆதரவாளர்கள் 166 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை - பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி

    • போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.
    • 77 பேர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக் - இ - இன்ஸாஃப் கட்சியைச் சேர்ந்த 166 உறுப்பினர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    கடந்த 2023-ம் ஆண்டு இம்ரான் கான் ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதன்போது, பஞ்சாப் மாகாணத்தில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் புலனாய்வுத் துறை அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும், ராணுவத் தளவாடங்களும் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.

    இந்நிலையில் ஃபைசலாபாத்திலுள்ள பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட நிலையில் 185 பேரில், 108 பேருக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. 77 பேர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், ஃபைசலாபாத் நகர காவல் நிலையம் மீதான தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்ட 58 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    தேசிய சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஒமர் அயூப், பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஷிபிலி ஃபராஸ், சார்தாஜ் குல், ஷாஹிப்சடா ஹமித் ரஸா உள்ளிட்ட இம்ரான் கான் கட்சியின் மூத்த 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.

    Next Story
    ×