என் மலர்tooltip icon

    உலகம்

    செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளரை பார்த்து கண் அடித்த பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் - வீடியோ வைரல்
    X

    செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளரை பார்த்து கண் அடித்த பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் - வீடியோ வைரல்

    • அரசிற்கு எதிராக இந்தியாவின் கைப்பாவையாகச் செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டினார்.

    பாகிஸ்தானின் ராணுவ மக்கள் தொடர்புப் பிரிவின் தலைமை இயக்குநர், லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீஃப் சௌத்ரி செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர் ஒருவரை பார்த்து கண் அடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

    அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அகமது ஷெரீஃப், சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியவர் என்றும், அரசிற்கு எதிராக இந்தியாவின் கைப்பாவையாகச் செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டினார்.

    இது குறித்து கேள்வியெழுப்பிய பத்திரிகையாளர் அப்சா கோமல், "கடந்த காலத்தில் இருந்து இப்போது என்ன வேறுபாடு உள்ளது. அல்லது எதிர்காலத்தில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்க வேண்டுமா?" எனக் கேட்டார்.

    இதற்கு பதிலளித்த அகமது, கேலியான தொனியில், "அவர் (இம்ரான் கான்) ஒரு மன நோயாளி" என்று கூறிவிட்டு, சிரித்துக்கொண்டே கோமலைப் பார்த்து கண் சிமிட்டினார்.

    அகமது ஷெரீஃப், ஓசாமா பின்லேடனின் உதவியாளராக இருந்தவரும், அறிவிக்கப்பட்ட பயங்கரவாதியுமான சுல்தான் பஷிருதீன் மஹ்மூத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×