search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    டெல்லி சென்று பாருங்கள்.. பிரதமர் மோடியின் கீழ் ஜனநாயகத்தின் ஆரோக்கியம் குறித்து அமெரிக்கா கருத்து
    X

    மோடி, ஜான் கிர்பி

    டெல்லி சென்று பாருங்கள்.. பிரதமர் மோடியின் கீழ் ஜனநாயகத்தின் ஆரோக்கியம் குறித்து அமெரிக்கா கருத்து

    • இம்மாத இறுதியில் இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
    • அமெரிக்காவுடன் பல நிலைகளில் இந்தியா ஒரு வலுவான நட்புறவு கொண்டிருக்கிறது.

    வாஷிங்டன்:

    இந்திய ஜனநாயகத்தின் ஆரோக்கியம் குறித்து தெரிவிக்கப்பட்ட கவலை தரும் கருத்துக்களை புறந்தள்ளிய வெள்ளை மாளிகை, இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம் என்றும் புதுடெல்லி சென்று வரும் யாரும் இதை காண முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

    இந்திய பிரதமர் மோடி இம்மாத இறுதியில் அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம் என்றும் அதை புதுடெல்லி சென்று யாரும் தெரிந்து கொள்ளலாம் என்றும், ஜனநாயக அமைப்புகளின் வலிமை மற்றும் ஆரோக்கியம் குறித்தும் இரு நாடுகளுக்கிடையே கருத்து பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என தாம் எதிர் நோக்குவதாகவும் கூறினார்.

    மேலும் அவர் மேலும் கூறியதாவது:-

    மோடியின் தற்போதைய அமெரிக்க வருகை ஆழமான, வலிமையான கூட்டுறவு மற்றும் நட்பிற்கானது. அதை மேலும் மேம்படுத்த எதிர்நோக்குகிறோம். அமெரிக்காவுடன் பல நிலைகளில் இந்தியா ஒரு வலுவான நட்புறவு கொண்டிருக்கிறது.

    இதற்கு மேலும் பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இந்தியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடு என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை இரு தரப்பில் மட்டுமல்ல, பல தளங்களில் பல தரப்புகளை உள்ளடக்கியவை. இவையனைத்தையும் குறித்து பேசவும், இரு நாடுகளுக்கிடையே நட்பை மேம்படுத்தி வலுப்பெற செய்யவும், பிரதமர் மோடியின் வருகையை அமெரிக்க அதிபர் மிகவும் எதிர்நோக்கியுள்ளார்.

    ஷாங்க்ரீலா உரையாடலில் நீங்கள் அதை கண்டிருப்பீர்கள். ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின், இந்தியாவுடனான கூடுதல் ராணுவ ஒத்துழைப்பு குறித்து தொடர இருப்பதை குறிப்பிட்டார். இரண்டு நாடுகளுக்கிடையே நல்ல பொருளாதார வர்த்தகம் நடைபெற்று வருகிறது. பசிபிக் குவாட் அமைப்பில் இந்தியா ஒரு உறுப்பினர். இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விஷயங்களில் இந்தியா ஒரு முக்கியமான நட்புறவுள்ள நாடு ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×