என் மலர்
நைஜீரியா
- படகில் மொத்தம் 85 பேர் பயணம் செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
- மழை, வெள்ளம் தொடர்பான விபத்துகளில் 300க்கும் மேற்பட்டோர் பலி
லாகோஸ்:
நைஜீரியாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.
இந்நிலையில் அனம்ப்ரா மாநிலத்தில் நைஜர் ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்ற அந்த படகு, திடீரென வெள்ளம் அதிகரித்ததால் நிலைகுலைந்து ஆற்றில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 76 பேர் உயிரிழந்தனர். படகில் மொத்தம் 85 பேர் பயணம் செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிபர் முகமது புகாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவில் பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை மழை, வெள்ளம் தொடர்பான விபத்துகளில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 20 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். பெரும்பாலான விளைநிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் அழுகிவிட்டதால் இந்த ஆண்டு உணவு தட்டுப்பாடு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
- நைஜீரியாவில் பஸ், கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் சிக்கி 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
அபுஜா:
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜீரியா. அந்நாட்டின் தென்கிழக்கே உள்ள ஒயோ மாகாணத்தின் இபரபா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது.
அப்போது சாலையின் மறுபுறம் வேகமாக வந்த கார் மீது பஸ் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் காரும், பஸ்சும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் கார் மற்றும் பஸ்சுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்த மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு மீட்பு பணியில் ஈடுபட்டது.
இந்த விபத்தில் சுமார் 20 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்ற போது துப்பாக்கிகளுடன் மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர்
- தேவாலயத்தின் பாதிரியார்கள் காயமின்றி உயிர் பிழைத்துள்ளனர்
லாகோஸ்:
நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓவோ நகரில் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது திடீரென அங்கு நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி ஏந்தியவர்கள் தேவாலய கட்டிடத்திற்கு வெளியேயும் உள்ளேயும் இருந்தவர்களை நோக்கி சுட்டதாக ஓண்டோ மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட மிகப்பெரிய படுகொலை என்று, ஒண்டோ மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடந்த இடத்தையும், காயமடைந்தவர்களையும் அவர் பார்வையிட்டார். தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும், அவர்களது நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் இந்த தாக்குதலில் தேவாலய பாதிரியார் மற்றும் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் காயமின்றி உயிர் பிழைத்தனர். தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நைஜீரியா அதிபர் முஹம்மது புஹாரி கண்டனம் தெரிவித்தார். இது கொடூரமானது என அவர் குறிப்பிட்டார்.






