search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பயங்கரவாதம் இரு நாடுகளுக்கும் பொது எதிரி - பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பேச்சு
    X

    பயங்கரவாதம் இரு நாடுகளுக்கும் பொது எதிரி - பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பேச்சு

    • பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேற்று இஸ்ரேல் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார்.
    • இஸ்ரேல் சென்ற அதிபர் மேக்ரான் அந்நாட்டு அதிபர் ஹெர்சாகை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    டெல் அவிவ்:

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இஸ்ரேல் நாட்டில் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று இஸ்ரேல் சென்றடைந்த மேக்ரான், அந்நாட்டு அதிபர் ஹெர்சாகை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதையடுத்து, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவைச் சந்தித்தார். இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    அப்போது அதிபர் இம்மானுவல் மேக்ரான் கூறுகையில், இஸ்ரேலுக்கும், பிரான்சுக்கும் பயங்கரவாதம் பொது எதிரி. இதில் இஸ்ரேல் தனியாக இல்லை. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்தவர்கள் ஹமாசுக்கு எதிராகவும் ஒன்றிணைய வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் உலக அளவில் ஒன்றிணைந்தது போல, ஹமாசுக்கு எதிரான போரிலும் பிரான்ஸ் ஒன்றிணையும். பாலஸ்தீன பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் இஸ்ரேல் தீர்வு கண்டால் மட்டுமே மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி, நிலைத்தன்மை ஏற்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×