search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பருவநிலை மாற்ற சவாலை எதிர்கொள்வதில் இந்தியா முன்னிலை- மத்திய மந்திரி ஜிதேந்திரசிங்
    X

    மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்

    பருவநிலை மாற்ற சவாலை எதிர்கொள்வதில் இந்தியா முன்னிலை- மத்திய மந்திரி ஜிதேந்திரசிங்

    • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது.
    • ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்டுபிடிப்புகளை இந்தியா ஆதரித்து வருகிறது.

    பிட்ஸ்பர்க்:

    அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற உலக தூய்மை எரிசக்தி நடவடிக்கை அமைப்பு கருத்தரங்கில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    போக்குவரத்தில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் நிலையான உயிரி எரிபொருள்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பயோடெக்னாலஜி துறை மூலம் இந்தியா, மேம்பட்ட உயிரி எரிபொருள்கள் மற்றும் கழிவுகளிலிருந்து ஆற்றல் தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்டுபிடிப்புகளை ஆதரித்து வருகிறது.

    நவீன உயிரித் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி மேம்பட்ட நிலையான உயிரி எரிபொருளில் பணிபுரியும் ஒரு இடைநிலைக் குழுவைக் கொண்ட 5 உயிரி ஆற்றல் மையங்களை இந்தியா நிறுவியுள்ளது. காலநிலை மாற்றத்தின் உலகளாவிய சவாலை எதிர்கொள்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது.

    2030 ஆம் ஆண்டில் உமிழ்வு தீவிரத்தை 35% குறைக்கும் இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கத் திட்டத்தை இந்தியாவும் செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×