search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இஸ்ரேல் கப்பல்கள் தான் இலக்கு.. ஹவுதி எச்சரிக்கையால் பரபரப்பு
    X

    இஸ்ரேல் கப்பல்கள் தான் இலக்கு.. ஹவுதி எச்சரிக்கையால் பரபரப்பு

    • கப்பல்களை கடத்துவோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
    • கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் கண்டனம்.

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடர்ச்சியாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை ஆதரவு தெரிவித்து இருக்கிறது. செங்கடல் பகுதிக்கு இஸ்ரேலிய கப்பல்கள் மற்றும் அந்த நாட்டு கொடிகளுடன் வரும் கப்பல்களை கடத்துவோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

    இந்த நிலையில், துருக்கியில் இருந்து கேலக்சி லீடர் என்ற சரக்கு கப்பல் இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில் இஸ்ரேலியர்கள் உள்பட பல்வேறு நாட்டை சேர்ந்த 52 பணியாளர்கள் பயணம் செய்தனர். இந்த கப்பல் ஏமன் அருகே தெற்கு செங்கடல் பகுதிக்கு வந்த போது திடீரென மாயமானது.

    அந்த சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்று விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    இதனிடையே, இஸ்ரேலின் கப்பல்கள் எங்களின் "நியாயமான இலக்கு. அது எங்கிருந்தாலும், நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்" என்று ஹவுதி அமைப்பின் ராணுவ அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.

    தற்போது கடத்தப்பட்டு இருக்கும் கேலக்ஸி லீடர் என்ற சரக்கு கப்பல் பிரிட்டனில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதனை ஜப்பானை சேர்ந்த நிறுவனம் இயக்கி வருகிறது. எனினும், இதில் இஸ்ரேலை சேர்ந்த வியாபாரிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×