என் மலர்
உலகம்

காசா மருத்துவமனையில் அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் 5 பேரை கொலை செய்த இஸ்ரேல் ராணுவம்
- கடந்த 2023 முதல் காசாவில் 238 பத்திரிகையாளர்களை இஸ்ரேல் ராணுவத்தினர் கொன்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
- இஸ்ரேலிய இராணுவம் பத்திரிகையாளர்கள் கொலைக்கு பொறுப்பேற்றுக் கொண்டது.
காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் உலக அவளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, அல் ஷிபா மருத்துவமனையின் பிரதான வாயிலுக்கு அருகே நடந்த தாக்குதலில் அல் ஜசீரா அரபு நிருபர் அனஸ் அல் ஷெரீப், நிருபர் முகமது ரைக் மற்றும் கேமரா ஆபரேட்டர்கள் இப்ராஹிம் ஜாஹிர், முகமது நௌபால் மற்றும் மோமின் அலிவா ஆகியோர் உயிரிழந்தனர்.
ஹமாஸ் முகவர்களுக்கு உதவ முயன்றபோது அல் ஷெரீஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் பத்திரிகையாளர்கள் கொலைக்கு பொறுப்பேற்றுக் கொண்டது.
போர் தொடங்கிய கடந்த 2023 முதல் காசாவில் 238 பத்திரிகையாளர்களை இஸ்ரேல் ராணுவத்தினர் கொன்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
பத்திரிகையாளர்களுக்கான சுதந்திரத்தை முடக்கும் வகையில் இஸ்ரேல் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக காசா பத்திரிகையாளர் சங்கம் மற்றும் சர்வதேச பத்திரிகையாளர் அமைப்புகள் இந்த கொலைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.






