search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காசாவில் உள்ள இந்தியர்களுக்கு அவசர உதவி எண்ணை அறிவித்த இந்தியா
    X

    காசாவில் உள்ள இந்தியர்களுக்கு அவசர உதவி எண்ணை அறிவித்த இந்தியா

    • காசா முழுவதும் குண்டு வீச்சு தொடர்ந்து நடைபெற்று வருகிறது
    • அனைத்து முக்கிய சேவைகளையும் இஸ்ரேல் துண்டித்து விட்டது

    கடந்த சனிக்கிழமை பாலஸ்தீன பயங்கரவாத ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதில் 1000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள்.

    இதனை தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர் தொடுத்திருக்கிறது. காசா பகுதி முழுவதும் ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தேடி தேடி வேட்டையாடி வருகின்றனர்.

    காசா முழுவதும் குடிநீர், உணவு, மின்சாரம், எரிபொருள் உட்பட அனைத்து சேவைகளையும் இஸ்ரேல் துண்டித்து விட்டது. இஸ்ரேலின் தாக்குதலால் காசாவிலுள்ள மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிகிறது.

    தற்போது அதிதீவிரமாக 5-வது நாளாக போர் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக 24 மணி நேர அவசர உதவி சேவையை குறித்து இந்தியா அறிவித்திருக்கிறது.

    "பாலஸ்தீனத்தில் உள்ள நெருக்கடியான சூழ்நிலையில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் அங்குள்ள இந்தியர்களுக்கான அலுவலகத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்" என இந்தியர்களுக்கான அலுவலகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதை தவிர, அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ள உதவும் வகையில் இந்தியாவில் உள்ள அவர்களின் உறவினர்களுக்காக இங்கு வெளியுறவு துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸ் அப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

    1800118797 (இலவச எண்)

    +91-11 23012113

    +91-11-23014104

    +91-11-23017905

    +919968291988

    Next Story
    ×