search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    வரலாறு காணாத மாபெரும் போராட்டம் நடத்தப்படும்: இம்ரான் கான் எச்சரிக்கை
    X

    இம்ரான் கான்

    வரலாறு காணாத மாபெரும் போராட்டம் நடத்தப்படும்: இம்ரான் கான் எச்சரிக்கை

    • இம்ரான் கான் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
    • இம்ரான் கான் தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறார்.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்ந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார். தனது அரசை வெளிநாட்டு சக்தி சதி செய்து கவிழ்த்து விட்டதாகவும், உடனே பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான்கான் வலியுறுத்தி வருகிறார்.

    தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டை அமெரிக்காவும் தற்போதைய பாகிஸ்தான் அரசாங்கமும் மறுத்துள்ளன. மேலும் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த இம்ரான் கான் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இம்ரான் கான், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து பாசிச நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குற்றம் சாட்டினார். இந்த நிலையில், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் கட்சியின் தேசிய மாநாடு இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவராக இம்ரான்கானே மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    அப்போது தொண்டர்களிடம் இம்ரான் கான் பேசியதாவது;- "பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளோம். இது எங்கள் உரிமை. அனைத்து கட்சி அமைப்புகளையும் தயாராக இருக்கும்படி நான் கூறியுள்ளேன். சுப்ரீம் கோர்ட்டிலிருந்து அனைத்து தெளிவையும் பெற நாங்கள் காத்திருக்கிறோம். அது முடிந்தவுடன், அடுத்த சில நாட்களில் நான் தேதியை அறிவிப்பேன். உண்மையான சுதந்திரத்திற்கான நமது பிரச்சாரத்திற்கு நாம் முழுவதுமாகச் செல்ல வேண்டும்."

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×