என் மலர்tooltip icon

    உலகம்

    மோடியின் அரசியல் வாழ்க்கையை அழிக்க நான் விரும்பவில்லை - வைரலாகும் ட்ரம்ப் பேச்சு!
    X

    'மோடியின் அரசியல் வாழ்க்கையை அழிக்க நான் விரும்பவில்லை' - வைரலாகும் ட்ரம்ப் பேச்சு!

    • பழைய வீடியோவின் ஒரு பகுதி மட்டும் வெட்டப்பட்டு மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.
    • அன்பு என்ற வார்த்தையை நீங்கள் வேறுவிதமாக எடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை.

    பிரதமர் நரேந்திர மோடியின் "அரசியல் வாழ்க்கையை அழிக்க நான் விரும்பவில்லை" என கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப்,

    "மோடி ஒரு சிறந்த மனிதர். அவர் என்னை நேசிக்கிறார்... அன்பு என்ற வார்த்தையை நீங்கள் வேறுவிதமாக எடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. அவரது அரசியல் வாழ்க்கையை நான் அழிக்க விரும்பவில்லை" எனப் பேசியிருந்தார். அதாவது காதல் என்ற வார்த்தையை அரசியல் ரீதியாகத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக நகைச்சுவையாக, "அவரது அரசியல் வாழ்க்கையை நான் அழிக்க விரும்பவில்லை" என்று விளக்கம் அளித்தார்.

    கடந்தாண்டு ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பான வர்த்தகப் பதற்றங்கள் நிலவியபோது ட்ரம்ப் இந்தக் கருத்தை முன்வைத்திருந்தார். தற்போது இந்தியா-அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், பழைய வீடியோவின் ஒரு பகுதி மட்டும் வெட்டப்பட்டு மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நான் அந்த வீடியோவைப் பார்க்கவில்லை... இருப்பினும், அத்தகைய வீடியோ இருந்தால், அது உண்மையாக இருந்தாலும் சரி, பொய்யாக இருந்தாலும் சரி, நாங்கள் அதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×