என் மலர்tooltip icon

    உலகம்

    ஹோண்டுராசில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பேர் பரிதாப பலி
    X

    ஹோண்டுராசில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பேர் பரிதாப பலி

    • அமெரிக்காவின் ஹோண்டுராசில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது.
    • இந்த விபத்தில் குறைந்தது 12 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஹோண்டுராசில் சுமார் 60 பேரை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

    டெகுசிகல்பாவில் இருந்து சுமார் 41 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் உள்ள ஓடையில் விழுந்து பாலத்தில் மோதி விபத்தில் சிக்கியது என போலீசார் தெரிவித்தனர்.

    இந்த விபத்தில் 12 பேர் பலியாகினர். 10 பேர் சம்பவ இடத்திலும், 2 பேர் டெகுசிகல்பாவில் உள்ள மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

    மேலும் 20-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×