என் மலர்tooltip icon

    உலகம்

    திருமண செலவை ஈடுகட்ட மணமகனின் புது யுக்தி
    X

    திருமண செலவை ஈடுகட்ட மணமகனின் புது யுக்தி

    • வைரலான பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரது படைப்பாற்றலை பாராட்டி பதிவிட்டனர்.
    • மற்றொருவர், இந்த ஆண்டின் வெற்றிகரமான சந்தைப்படுத்துதல் விருது உங்களுக்கு கிடைக்கும் என பதிவிட்டிருந்தார்.

    திருமண செலவுகளை ஈடுகட்டுவதற்காக மணமகன் செய்த செயல் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள லில்லி பகுதியை சேர்ந்தவர் டகோபர்ட் ரெனோப். இவர் ஸ்டார்ட் அப் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 25-ந் தேதி இவரது திருமணம் நடைபெற்றது.

    திருமண செலவுகளை ஈடுகட்டவும், பணம் திரட்டவும் புது வகையை கையாள முடிவு செய்தார். இதற்காக அவர் தனது திருமண உடையில் பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்களை விளம்பரம் செய்தார். இதன்மூலம் மொத்தத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மென்பொருள் கருவிகள் உள்பட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 26 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப்கள் கிடைத்தன.

    இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் செய்த பதிவில், எங்கள் திருமணத்துக்கு பணம் கிடைக்க உதவிய 26 ஸ்டார்ட் அப்களுக்கு நன்றி. இது ஒரு அழகான நாள் என்று பதிவிட்டதோடு, விளம்பரங்களுடன் கூடிய தனது ஆடையையும் பதிவிட்டிருந்தார். வைரலான பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரது படைப்பாற்றலை பாராட்டி பதிவிட்டனர். ஒருவர், இது மிகவும் வேடிக்கையானது. அருமையாக உள்ளது என பதிவிட்டிருந்தார். மற்றொருவர், இந்த ஆண்டின் வெற்றிகரமான சந்தைப்படுத்துதல் விருது உங்களுக்கு கிடைக்கும் என பதிவிட்டிருந்தார்.

    Next Story
    ×