எவரெஸ்ட் சிகரத்தின் கழுகு பார்வை காட்சி... வீடியோ வைரல்

கும்பு பனிப்பாறை மற்றும் சுற்றி உள்ள பனிப்பாறைகளின் வியக்க வைக்கும் காட்சிகளை காட்டுகிறது. வீடியோ வைரலாகி மலை ஏறுபவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தின் கழுகு பார்வை காட்சி... வீடியோ வைரல்
Published on: 

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் பிரமிக்க வைக்கும் வான்வெளி காட்சிகள் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவை சேர்ந்த ஒருவரால் உருவாக்கப்பட்ட ட்ரோன் மூலம் படம்பிடிக்கப்பட்ட 4 நிமிட வீடியோவில் எவரெஸ்ட் சிகரத்தின் அழகிய, பிரமாண்ட காட்சிகள் உள்ளன. 5,300 மீட்டர் உயரம் கொண்ட அந்த சிகரத்தின் அடிப்படை முகாமில் இருந்து வீடியோ தொடங்குகிறது.

பின்னர் அங்குள்ள கும்பு பனிப்பாறை மற்றும் சுற்றி உள்ள பனிப்பாறைகளின் வியக்க வைக்கும் காட்சிகளை காட்டுகிறது. மலை ஏறுபவர்கள் மலையின் மீது ஏறியோ அல்லது கீழ் வழியாகவோ செல்வதை இந்த காட்சி காட்டுகிறது.

இந்த வீடியோ வைரலாகி மலை ஏறுபவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com