search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    தைவான் மீது போர் தொடுக்க தயங்கமாட்டோம் - சீன அமைச்சர் எச்சரிக்கை
    X

    சீன ராணுவம்

    தைவான் மீது போர் தொடுக்க தயங்கமாட்டோம் - சீன அமைச்சர் எச்சரிக்கை

    • சில நாடுகள் சீனாவைக் கட்டுப்படுத்த தைவானை பயன்படுத்துவது ஒருபோதும் வெற்றிபெறாது என தெரிவித்துள்ளார்.
    • தைவானை சீனா நாட்டின் ஒரு பகுதியாக கருதுகிறது என்றும் தெரிவித்தார்.

    பெய்ஜிங்:

    சீனாவின் எல்லையில் அமைந்துள்ள தைவான் மீது சீனா படையெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஷங்ரி-லா பாதுகாப்பு உச்சிமாநாட்டில் அமெரிக்கப் பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் , சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கை சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பில் தைவான் பிரச்சினையை பற்றி இருவரும் விவாதித்தனா். அப்போது அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின், தைவான் நாட்டை சீா்குலைக்கும் நடவடிக்கையை சீனா தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதற்கு பதிலளித்த வெய் ஃபெங், தைவானை சீனா நாட்டின் ஒரு பகுதியாக கருதுகிறது. தைவானை சீனாவில் இருந்து பிரிக்க துணிந்தால் அதன் மீது போர் தொடுக்கவும் சீனா தயங்காது. மேலும், சில நாடுகள் சீனாவைக் கட்டுப்படுத்த தைவானை பயன்படுத்துவது ஒருபோதும் வெற்றிபெறாது. தைவானின் சுதந்திரம் என்னும் சதியை முறியடித்து நாட்டின் ஒருங்கிணைப்பை சீனா உறுதிசெய்யும்.

    இவ்வாறு சீன அமைச்சர் தெரிவித்தார்.

    Next Story
    ×