தொடர்ந்து ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கும் அமேசான்#Amazon

அமேசான் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.நடப்பு நிதி ஆண்டில் இந்த நிறுவனம் 16 ஆயிரம் பேரை நீக்கியுள்ளது.
தொடர்ந்து ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கும் அமேசான்#Amazon
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இயங்கி வரும் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அமேசான். இந்த நிறுவனத்தில் உலக அளவில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிறுவனம் அடிக்கடி ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நடப்பு நிதி ஆண்டில் 16 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.

இந்நிலையில், ரோபோடிக்ஸ் பிரிவில் பணிபுரிந்த 150க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு முதல் தற்போதுவரை 57,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது.

பொருளாதார நெருக்கடி, செயற்கை நுண்ணறிவு தாக்கம் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com