என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்

மாஸ்கோவில் பாதாள கழிவுநீர் சுரங்கப்பாதையை சுற்றிப்பார்த்தபோது திடீர் வெள்ளப்பெருக்கு- 4 பயணிகள் உயிரிழப்பு

- மோஸ்க்வா ஆற்றில் மேலும் ஒரு ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சுற்றுப்பயணத்தின் அமைப்பாளர் மீது சட்ட அமலாக்கப் பிரிவு குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தகவல்.
மாஸ்கோவில் பல சுற்றுலா வழிகாட்டிகள் தலைநகரின் கழிவுநீர் அமைப்பின் பரந்த சுரங்கங்களுக்குள் பயணிகளை அழைத்துச்சென்று பயணங்களை மேற்கொள்கின்றனர். அவற்றில் சில சுரங்கங்கள் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டன. இதனால், சுரங்கங்களை சுற்றிப் பார்ப்பதற்காகவே ஏராளமான சுற்றுலாபயணிகள் இங்கு குவிகின்றனர்.
இந்நிலையில், மாஸ்கோவில் கழிவுநீர் அமைப்பின் சுரங்கப்பாதை சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற 4 பேர் தண்ணீரில் அடித்துச்சென்று உயிரிழந்தனர். மேலும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்கோவில் பெய்த திடீர் மழையால் பாதாள கழிவுநீர் அமைப்பில் நீர் மட்டம் விரைவாக உயர்ந்தது. அப்போது, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பயணிகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதில், ஒரு பெண்ணின் உடல் உட்பட மூன்று பேரின் சடலங்கள் அதிகாலையில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மோஸ்க்வா ஆற்றில் மேலும் ஒரு ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுரங்கப்பாதையில் மக்கள் தப்பிக்கக்கூடிய தங்குமிடங்கள் இருப்பதாகவும், ஆனால் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் நகர்ப்புற ஆய்வாளர் ஒருவர் கூறினார்.
மேலும், சுற்றுப்பயணத்தின் அமைப்பாளர் மீது சட்ட அமலாக்கப் பிரிவு குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.