ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீவிபத்து: பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு

ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்தக் குடியிருப்பில் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீவிபத்து: பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு
Published on

ஹாங்காங்:

ஹாங்காங் நாட்டின் தை போ நகரில் வாங் பெக் கோர்ட் காம்பிளஸ் பகுதியில் 35 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மதியம் 2.50 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அடுக்குமாடி குடியிருப்பின் மேல்பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.

தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் படுகாயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 29 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்னும் 279 பேர் மாயமாகி உள்ளனர் என்றும், அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com