search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தான் அணு ஆயுதம்
    X
    பாகிஸ்தான் அணு ஆயுதம்

    பாகிஸ்தான் குறித்து இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க உளவுத்துறை

    இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தான் தனது ராணுவத்துக்கு பயிற்சியை வழங்கி வருகிறது.
    வாஷிங்டன்:

    அமெரிக்கா நாடாளுமன்றத்தின் ஆயுதப்படை தொடர்பான செனட் குழு கூட்டத்தில், அமெரிக்கா உளவுத்துறை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர் இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து உரையாற்றினார். 

    அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

    கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் உறவு மோசமாகியிருக்கிறது. இந்தியாவின் அணு ஆயுதங்கள், ராணுவ பலத்தை பார்க்கும் பாகிஸ்தான், தங்கள் நாட்டு அணு ஆயுதங்களை முக்கியமாக கருதுகிறது. 

    இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தான் தனது ராணுவத்துக்கு பயிற்சியை வழங்கி வருகிறது. மேலும் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை நவீனப்படுத்தும், அதிகரிக்கும் நடவடிக்கைகாளில் ஈடுப்பட்டுள்ளது. 

    இவ்வாறு உளவுதுறை எச்சரித்துள்ளது.
    Next Story
    ×