என் மலர்

  உலகம்

  விமானம்
  X
  விமானம்

  பின்லாந்தில் விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பின்லாந்தில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  ஹெல்சின்கி:

  பின்லாந்து நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜிவாஸ்கிலா நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஒரு விமானி மட்டும் இருந்தார்.

  கிளம்பிய சிறிது நேரத்தில் விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதை தொடர்ந்து விமானம் விமான நிலையத்துக்கு அருகிலேயே விழுந்து நொறுங்கியது.

  இதை தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

  எனினும் இந்த கோர விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

  Next Story
  ×