என் மலர்
உலகம்

உக்ரையை விட்டு வெளியேறும் இந்தியர்கள்
இந்தியர்கள் அனைவரும் கார்கிவ் நகரை விட்டு வெளியேற உத்தரவு
உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
புதுடெல்லி:
உக்ரைன் மீது உக்கிரமான தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள் ஒரு சில பகுதிகளை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். 7வது நாளாக போர் நீடிக்கும் நிலையில், கார்கிவ் நகரில் ரஷிய படைகள் தீவிர தாக்குதல் நடத்துகின்றன.
எனவே, பாதுகாப்பு கருதி கார்கிவிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.
கார்கிவில் உள்ள இந்தியர்கள் பெசோசின், பபாயி, பெஸ்லியுடோவ்கா ஆகிய பகுதிகளுக்கு செல்லவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டு நேரப்படி இன்று மாலை 6 மணிக்குள் அங்கு சென்றுவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 'ஆபரேஷன் கங்கா' என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
Next Story






