என் மலர்
உலகம்

போப்
தூதரகத்துக்கு நேரில் சென்று போரை நிறுத்துமாறு போப் வேண்டுகோள்
ரஷிய தூதரக அதிகாரிகளை சந்தித்து உக்ரைன் மீது தொடுக்கப்பட்டுள்ள போர் குறித்த தனது கவலையை போப் தெரிவித்தார்.
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரை கைவிடுமாறு உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. ஆனால் அதை ரஷியா ஏற்கவில்லை.
இந்த நிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் ரோமில் உள்ள ரஷிய தூதரகத்துக்கு திடீரென்று நேரில் சென்றார்.
அப்போது அங்கிருந்த தூதரக அதிகாரிகளை சந்தித்து உக்ரைன் மீது தொடுக்கப்பட்டுள்ள போர் குறித்த தனது கவலையை தெரிவித்தார். போரை உடனே நிறுத்துமாறு அவர் தூதரக அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ரஷிய தூதரகத்துக்கு போப் ஆண்டவர் நேரில் சென்றதை வாடிகன் அதிகாரிகள் உறுதி செய்தனர். போப் ஆண்டவர் சிறிய வெள்ளை காரில் ரஷிய தூதரகத்துக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து பேசினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போப் ஆண்டவரின் இந்த போர் நிறுத்த முயற்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படியுங்கள்...சிறப்பு விமானத்தில் வரவிருக்கும் 5 தமிழர்கள் உள்பட 470 இந்தியர்கள்
Next Story






