என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்

X
புதின், ஜான்சன், பைடன்
ரஷிய அதிபரின் சொத்துக்களை முடக்க அமெரிக்கா, பிரிட்டன் ஆதரவு
By
மாலை மலர்25 Feb 2022 10:02 PM GMT (Updated: 25 Feb 2022 10:02 PM GMT)

ஐரோப்பிய நாடுகளில் உள்ள புதினின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரஸ்ஸல்ஸ்:
உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷிய படைகளுக்கு உத்தரவிட்டுள்ள அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுக்கு, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் உள்ள புதினின் சொத்துக்களை முடக்க அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பும்
ஒப்புதல் தெரிவித்துள்ளது.
அதேபோல், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவின் சொத்துக்களையும் முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதின் மற்றும் லாவ்ரோவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க நேட்டோ தலைவர்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்காக ரஷியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக புதின் மற்றும் லாவ்ரோவின் சொத்துகள் மீது ஐரோப்பிய யூனியன் கருவூலத் துறை தடைகளை அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்..
உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கிய ஸ்வீடனுக்கு ரஷியா எச்சரிக்கை
Next Story
×