search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஹிட்லர் - காந்தி
    X
    ஹிட்லர் - காந்தி

    ரஷிய அருங்காட்சியகத்தில் ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதம் காட்சிக்கு வைக்கப்படுகிறது

    ரஷியாவில் உள்ள டிரெட்டியாகோவ் அருங்காட்சியகத்தில் இந்திய கலைக்கண்காட்சியில் காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதத்தை காட்சிக்கு வைக்க இருப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
    மாஸ்கோ:

    ஜெர்மனியில் 1933 முதல் 1945-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த சர்வாதிகாரி ஹிட்லர் யூதர்கள் ஒழிப்புத் திட்டம் என்ற பெயரில் 60 லட்சம் யூத மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தார்.

    அதே காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சுதந்திரம் கோரி அகிம்சை வழியில் போராடி வந்த இந்தியாவின் தேசதந்தை மகாத்மா காந்தி, ஜெர்மனியில் யூதர்கள் ரத்தம் சிந்துவதை நிறுத்த வலியுறுத்தி 1939-ம் ஆண்டு ஹிட்லருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

    காந்தி, ஹிட்லருக்கு எழுதிய அந்த கடிதம் தற்போது ரஷியாவில் உள்ள டிரெட்டியாகோவ் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் டிரெட்டியாகோவ் அருங்காட்சியகத்தில் வருகிற மே மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நடைபெறும். இந்திய கலைக்கண்காட்சியில் காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதத்தை காட்சிக்கு வைக்க இருப்பதாக அருங்காட்சியக நிர்வாகம் அறிவித்துள்ளது.


    Next Story
    ×