என் மலர்tooltip icon

    உலகம்

    அதிகாரிகளுடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
    X
    அதிகாரிகளுடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

    பிலிப்பைன்ஸ் மந்திரியுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் நடந்தது - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 6 நாள் அரசுமுறை பயணமாக ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு சென்றுள்ளார்.
    மணிலா:

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குவாட் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்று பேசினார். அந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்றனர்.

    இதையடுத்து, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி மாரைஸ் பெய்ன் உடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக் கொண்டு ஜெய்சங்கர் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் சென்றார். அங்கு, அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி டியோடோரோ எல்.லாக்சின் ஜூனியரை சந்தித்துப் பேசினார்.

    பிலிப்பைன்சின் வெளியுறவுத்துறை மந்திரி டியோடோரோ எல்.லாக்சின் உடன் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தப்பட்டது. தேசிய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதித்தோம் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×